Don't Miss!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- News
டெல்லியின் "டேஷர்".. யார் இந்த ஸ்வேதா செராவத்? இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம்!
- Technology
சுத்தி சுத்தி அடிக்கும்! 3D சவுண்ட் ஆதரவுடன் மலிவு விலையில் போட் ராக்கர்ஸ் 378!
- Lifestyle
இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... கத்திரிக்காய் தொக்கு
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
குக்வித் கோமாளி.. சிரிக்க ரெடியா பங்காளி.. அடுத்த பிரம்மாண்டத்திற்கு தயாராகும் சேனல்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக பிக்பாஸ் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு சேனல் தயாராகி வருகிறது.
விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் துவங்கவுள்ளதாக ப்ரமோ வெளியிட்டுள்ளது சேனல்.
அசீமுக்கு
ரெட்
கார்டு
கொடுங்க..அப்போது
தான்
பிக்பாஸ்
நிகழ்ச்சி
விளங்கும்..கொந்தளிக்கும்
நெட்டிசன்ஸ்!

விஜய் டிவியின் நிகழ்ச்சிகள்
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் என அடுத்தடுத்த படைப்புகள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. பெரும்பாலும் இந்த சேனலின் முக்கியமான நிகழ்ச்சிகள் அனைத்தும் இரவு நேரங்களிலேயே ஒளிபரப்பாகி வருகின்றன. இதன்மூலம் அலுவலகம் விட்டு வீடு வரும் ரசிகர்களை அவர்கள் தங்களது நிகழ்ச்சிகளால் கட்டிப் போட்டு வருகின்றனர்.

இறுதிக்கட்டத்தில் பிக்பாஸ் சீசன் 6
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக வலம்வந்த இந்த நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த பிரம்மாண்டத்திற்கு விஜய் டிவி தற்போது தயாராகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் குறித்த அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

4வது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி
இதுவரை மூன்று சீசன்களை வெற்றிகரமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்நிலையில் விரைவில் இதன் 4வது சீசன் துவங்கவுள்ளதாக தற்போது புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. கல்யாண சமையல் சாதம் என்ற பாடலின் அடிப்படையில் இந்தப் புதிய ப்ரமோ அமைந்துள்ளது. இதில் நடுவர்களாக மகேஷ் பட் மற்றும் செப் தாமு ஆகியோர் கும்பகர்ணன் போல வேடமிட்டு கோமாளிகளை கலாய்க்கும் படியாக இந்த பிரமோ காணப்படுகிறது.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் ப்ரமோ
கையில் கதாயுதங்களுடன் இவர்களை பார்க்கும்போது இந்த சீசனும் வேறு லெவலில் இருக்கும் என்பதை உணர முடிகிறது. அவர்கள் முன்பு அறுசுவை விருந்து படைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் குக்குகள் மற்றும் கோமாளிகள் மட்டுமில்லாமல் ஆங்கர் தர்ஷனும் காணப்படுகிறார். இதில் முக்கியமான ட்விஸ்டாக பிக்பாஸ் சீசனில் களைகட்டி பின்பு காணாமல் போன ஜிபி முத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெறவுள்ளது இந்த ப்ரமோ மூலம் தெரியவருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜிபி முத்து
ஜிபி முத்துவுடன் புது முகங்களும் இந்த ப்ரமோவில் காணப்படுகின்றனர். மணிமேகலை, புகழ் போன்றவர்களும் காணப்படுகின்றனர். மொத்தத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்வகையில் இந்த புதிய ப்ரமோ அமைந்துள்ளது. விரைவில் இந்த ஷோவில் பங்கேற்கும் குக்குகள் மற்றும் கோமாளிகள் குறித்த அறிவிப்பும் நிகழ்ச்சி துவங்கும் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.