நீண்ட நாள் காதல்.. சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி ஜோடி.. அப்ப அடுத்து அவங்க தானா!
பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்த அன்வரும், சமீராவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்த அன்வரும், சமீராவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
படத்தில் அல்லது சீரியலில் ஒன்றாக நடிக்கும் போது, நிஜமாகவே காதல் வயப்பட்டு ரியல் ஜோடிகளாக மாறும் ரீல் ஜோடிகள் ஏராளம். இதற்கு சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் சரி நிறைய தம்பதிகள் உதாரணமாக உள்ளனர்.
சமீபத்தில் கூட, ராஜா ராணி சீரியலில் சேர்ந்து நடித்த சஞ்சீவ் - ஆல்யா மானஸா முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் மைனா நந்தினியும், யோகேஷ்வரனும் திருமணம் செய்து கொண்டனர்.

இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நடிகர் அன்வரும், நடிகை சமீராவும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை சமீரா ஷெரீஃப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரீல் ஜோடி
காதலர்களான அவர்கள் பகல் நிலவு சீரியலிலும் ஜோடியாகவே நடித்தனர். அந்த சீரியல் முடிந்த போதே இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிய இடைவெளி தந்து தற்போது தான் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

மகிழ்ச்சி
இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைப்பெற்றிருக்கும் இத்திருமணத்தில், நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்து வருவது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கவிலியா காதல்
அன்வர் - சமீரா திருமணத்தின் மூலம் கவிலியா ரசிகர்களுக்குப் புதிய நம்பிக்கை உண்டாகியுள்ளது. தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து வருவது போல, கூடிய சீக்கிரம் கவின் - லாஸ்லியாவும் இதே போல் நல்ல சேதி சொல்வார்களா என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் தான் வாயைத் திறப்பேனா என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











