யார் கேஸ் போட்டால் என்ன?: விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய விஜய் டிவி
Recommended Video

சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.
கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே படத்திற்கு தடை கோரி வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம். கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் விஸ்வரூபத்திற்கு விளம்பரம் தேடினார் கமல் ஹாஸன். விஸ்பரூபம் 2 படக்குழுவினர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களுடன் சிறிது நேரம் இருந்தனர்.
விஜய் டிவி மூலம் விஸ்வரூபம் 2 படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இந்நிலையில் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது. விஸ்வரூபம் படத்துடன் ஒப்பிடும்போது 2வது பாகத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை பெரிதாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











