கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தை பங்கு போட்ட விஜய் டிவி, அமேசான் #KKS
சென்னை: கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சயீஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கடைக்குட்டி சிங்கம். ரொம்ப நாள் கழித்து கார்த்தி கிராமத்து கெட்டப்பில் அதுவும் விவசாயியாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
விஜய் டிவி
கடைக்குட்டி சிங்கத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.
அமேசான்
கடைக்குட்டி சிங்கம் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் வாங்கிவிட்டதாக தயாரிப்பு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தி
கார்த்தியை கிராமத்து கெட்டப்பில் பார்ப்பது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காலா
விஜய் டிவி ரஜினி நடித்துள்ள காலா படத்தை ரூ. 75 கோடி கொடுத்து வாங்கியது. அதையடுத்து கார்த்தியின் படத்தை வாங்கியுள்ளது. காலாவை அடுத்து கடைக்குட்டி சிங்கத்தையும் விஜய் டிவியில் அடிக்கடி பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











