பாவனாவுக்கு என்னதான் ஆச்சு... லேட்டஸ்ட் போட்டோவால் அதிர்ந்த ரசிகர்கள்!
Recommended Video

சென்னை : சினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் அதிகமாகப் பின்பற்றுகிறார்கள்.
படங்களிலும், சீரியல்களிலும் அவர்கள் அணியும் ஆடைகளும், ஸ்டைலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாகிறது.
சீரியல்களில் பெண்கள் அணியும் உடைகள் ஃபேஷனாக மாறிவிடுகின்றன. ஏனெனில் அவர்கள் நேரடியாக மக்கள் முன்பு தங்களை வெளிக்காட்டுகிறார்கள். அதனால், திரைப் பிரபலங்களுக்கு சமூகரீதியாகவும் அதிகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டியது அவசியமாகிறது.

கடும் உடற்பயிற்சி
இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ரசிகர்களையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றனர். அப்படி, தொகுப்பாளினி ரம்யா உடல் எடையைக் குறைத்து, பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வென்று வருகிறார்.

அதிர்ச்சியான புகைப்படம்
விஜய் டிவி தொகுப்பாளினி பாவனாவும் கடும் உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறார். அப்படி கடும் உடற்பயிற்சிகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி பாவனா.
பாவனாவின் நியூ லுக்
பாவனாவின் இந்த நியூ லுக் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. ஏற்கெனவே, ஒல்லியாக இருக்கும் பாவனா, இன்னும் உடல் குறைத்திருக்கிறார். உடல் எடையைக் குறைத்த அவர் நம்பிக்கை வாசகம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
சீக்கு வந்த கோழி
மிகவும் ஒல்லியாக இருக்கும் பாவனாவைப் பார்த்து, " நீங்க பார்க்கிறதுக்கு சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கீங்க" என ஒருவர் கலாய்த்திருக்கிறார்.
பயமா இருக்கு
"அய்யோ... எலும்புக்கூடு டோய்... #Scary #Skeleton" என ஒருவர் கமென்ட் செய்திருக்கிறார்.
ஷின்சான் மாதிரி
"நீங்க பார்க்கிறதுக்கு ஷின்சான் மாதிரி இருக்கீங்க... இந்த போட்டோவை பார்த்ததும் நிஜமாவே நான் அதிர்ச்சியாகிட்டேன்" என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











