Bigg boss 7: பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கமல் கேட்ட கேள்வி.. ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த ஹவுஸ்மேட்ஸ்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 48வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

வாரயிறுதி எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த நிகழ்வுகளையொட்டி கமல் இந்த ப்ரமோக்களில் பேசியதையும் கேள்வி எழுப்பியதையும் பார்க்க முடிந்தது.

Vijay TV Bigg boss 7 show entered 48th day day and this weekend episodes promos released

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சியில் 7வது சீசன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினை துவக்கம் முதலே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 130 கோடி ரூபாய்கள் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

15 போட்டியாளர்கள்: இந்தப் போட்டி தற்போது 15 போட்டியாளர்களுடன் களைகட்டி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதில் பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை தானே விரும்பி வெளியேறினார். இந்நிலையில் வைல்ட் கார்ட் மூலம் தினேஷ், அர்ச்சனா உள்ளிட்ட 5 பேர் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். நித்தம் ஒரு டாஸ்க், விவாதங்கள், பிரச்சினைகள் என நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

கமல் குறித்த விமர்சனங்கள்: இந்த நிகழ்ச்சியில் மாயா கேங்கை புல்லி கேங் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கும் விசித்ரா தரப்பிலான குழுவினருக்கும் தொடர்ந்து சலசலப்புகள் இருந்து வருகின்றன. மாயாவிடம் கமல் பயப்படுவதாகவும் அதனால்தான் அவரது நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசாமல் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இந்த வாரம் தினேஷ் கேப்டனாக இருந்த நிலையில் பல சச்சரவுகளை அவர் எதிர்கொண்டார். இந்நிலையில் வாரயிறுதி எபிசோடின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளன. இன்றைய தினம் நிகழ்ச்சி 48வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியான முதல் ப்ரமோவில் யூத்தாக காட்சியளிக்கும் வகையில் அழகான உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்த கமல்ஹாசன், புதிதாக நிகழ்ச்சியில் கூட்டணிகள் மாறுவதாகவும் அது எங்கே கொண்டு சென்று விடுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு ப்ளேட் மரியாதை: தொடர்ந்து எல்லாரும் ஒரு ப்ளேட் மரியாதை கொடுக்க வேண்டுவதாகவும் அது கட்டுபடியாகாது என்று கூறப்படும் நிலையில் ஒரு ஸ்பூனாவது மரியாதை கொடுக்குமாறு கேட்பதாகவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரமோவில், எதற்காக உங்களுடைய பாத்திரத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்று கமல் கேள்வி எழுப்பினார். முன்னதாக சக போட்டியாளர்களின் கேரக்டரை இமிடேட் செய்து ஹவுஸ்மேட்ஸ் நடித்து காட்டியதையும் பார்க்க முடிந்தது.

மாயா, நிக்சன் மீது புகார்: இதையடுத்து பேசிய விஷ்ணு, மாயா தன்னை நெகட்டிவ்வான கேரக்டர் என்றும் அதிகமாக பின்னாடி பேசுவதாகவும் கூறியதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ் மணி, விஷ்ணு ஆகியோர் தன்னை திட்டியதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மணி, மாயாதான் அந்த செயலை செய்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய விசித்ரா, தன்னுடைய அன்பை போலியானது என்று நிக்சன் வெளிப்படுத்தியதாக வருத்தத்தை பதிவு செய்தார். மாயா, நிக்சன் மீதான புகார்களுக்கு கமலின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று இந்தப் ப்ரமோக்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X