நான் மன்னிப்பு கேட்டேனா? பாவம் நீங்கள்.. ரெடியா இருங்க.. வனிதாவுக்கு பதிலடி கொடுத்த நாஞ்சில் விஜயன்!
சென்னை: பிரச்சனையை பேசி புரிய வைக்க நினைத்தால் மன்னிப்பு கேட்டேன் என்று கூறுவதா என கேட்டு நாஞ்சில் விஜயன் வனிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா விஜயக்குமார் மூன்றாவது திருமணம் செய்தது முதலே நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். வனிதா பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்தார்.
அவரது முதல் மனைவியான எலிசபெத் இதுதொடர்பாக புகார் அளித்ததால் அவருக்கு ஆதரவாக நடிகைகள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

விளாசிய வனிதா
இதனால் கடுப்பான வனிதா, என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிட நீங்கள் யார் என விளாசினார். அவர்களின் பிரச்சனையால் டிவிட்டர் சமூக வலைதளம் அல்லோலகளப்பட்டது. படு மோசமான வார்த்தைகளால் வனிதா பேசியதால் கடுப்பான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒன்னேகால் கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வனிதா போட்டோக்கள்
இந்த பிரச்சனையெல்லாம் ஒரு புறம் இருக்க, விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன், சூர்யா தேவியுடன் தன்னை இணைத்து வைத்து பேசியதால் வனிதா மீது கடுப்பானார். வனிதா தொடர்பான சில அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டார்.

மன்னிப்பு கேட்டார்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை வனிதா, சூர்யா தேவியும் நாஞ்சில் விஜயனும் ஒன்றாக சரக்கடிக்கும் போட்டோவை வெளியிட்டார். மேலும் இதுதான் தமிழ் கலாச்சாரமா என கேட்டு விளாசினார். இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் நாஞ்சில் விஜயன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக பதிவிட்டார்.

திடீர் மனமாற்றம்
மேலும் தன்னைப் பற்றி ஷேர் செய்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை நீக்குவதாக நாஞ்சில் விஜயன் கூறியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நாஞ்சில் விஜயனின் இந்த திடீர் மனமாற்றத்திற்கு காரணம் என்ன என நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர்.
பாவம் நீங்கள்
இந்நிலையில் நடிகை வனிதாவின் டிவிட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நாஞ்சில் விஜயன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், ஒரு சில பிரச்சினையை பேசி புரிய வைப்பதற்கு முயற்சித்தால் அதை நான் மன்னிப்பு கேட்டேன் என்று நீங்கள் உணர்ந்து கொண்டால் பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள்..

மீண்டும் சூடுபிடித்துள்ளது
நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் மற்றொரு பதிவில் உண்மை மிக விரைவில் வெளி வரும் என்றும் தெரிவித்துள்ளார். நாஞ்சில் விஜயன் மன்னிப்பு கேட்டதாக வனிதா கூறியதால் பிரச்சனை சற்று ஓய்ந்தது என்று நினைத்தால் மீண்டும் சூடுபிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











