தீர்ந்தது பஞ்சாயத்து.. விஜய் டிவி கஸ்தூரிக்கு சம்பள பாக்கிய கொடுத்தாச்சாம்.. அவங்களே சொல்லிட்டாங்க!

சென்னை: விஜய் டிவி தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கஸ்தூரி.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட தனக்கு இதுவரை அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

கவனமாக இருக்கிறோம்

கவனமாக இருக்கிறோம்

பிக்பாஸ் 4 தொடங்குவதற்கு முன்பாக கஸ்தூரி கூறிய இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கஸ்தூரியின் குற்றச்சாட்டு குறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்று தெரிவித்தது.

காத்திருக்கிறோம்

காத்திருக்கிறோம்

மேலும் பிக்பாஸ் தமிழில் கஸ்தூரியின் பங்கேற்புக்கான தொழில்முறை கட்டணம் 2019 சீசனில் அவருக்கு செலுத்தப்பட்டாலும், அதற்கான ஜிஎஸ்டி தொகை அவரது ஜிஎஸ்டி தாக்கல்களில் பொருந்தாததால் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் கூறியது.

கஸ்தூரி கொடுக்கவில்லை

கஸ்தூரி கொடுக்கவில்லை

அது கிடைத்த பிறகு ஜிஎஸ்டி தொகை வழங்கப்படும். சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டதற்கான இன்வாய்ஸையும் அவர் சமர்ப்பிக்க தவறிவிட்டார், இதன் காரணமாக எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறியிருந்தது.

சில்லறை புத்தி

சில்லறை புத்தி

இதனை பார்த்து கடுப்பான கஸ்தூரி, பொய்யை நிஜமென்று ஊரை நம்ப வைப்பது விஜய் டிவிக்கு என்ன புதுசா என கேட்டு விளாசி விட்டார். விஜய் டிவியின் சில்லறை புத்தி இனி செல்லுபடியாகாது என ரொம்பவே காட்டமாக கூறியிருந்தார் கஸ்தூரி.

பாக்கியை கொடுத்துவிட்டார்கள்

பாக்கியை கொடுத்துவிட்டார்கள்

கஸ்தூரிக்கும் விஜய் டிவிக்கும் இடையிலான வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் டிவி கஸ்தூரிக்கு வைத்திருந்த சம்பள பாக்கியை கொடுத்து கணக்கை தீர்த்துள்ளது. இதனை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு வருஷம் கழிச்சு

ஒரு வருஷம் கழிச்சு

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், விஜய் டிவி எனக்கு எந்த பாக்கியும் வைக்கலன்னு பிரஸ் ஸ்டேட்மென்ட் குடுத்தாங்களே, அந்த சம்பள பாக்கிய கொடுத்துட்டாங்க. ஒரு வருஷம் தாமதம்தான் ஆனாலும் தீபாவளி நேர செலவுக்காகும், நன்றி விஜய் டிவி எங்கள் குடும்பங்களுக்கு உதவியதற்கு என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X