ரொம்ப சீக்கிரம் போய்ட்டீங்களே.. சித்ராவின் போட்டோவை பகிர்ந்து இரங்கல் தெரிவித்த விஜய் டிவி!

சென்னை: சித்ராவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து விஜய் டிவி அவரது போட்டோவை பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளது.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா.

28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம்சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அப்பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலில் சித்ரா தங்கி இருந்தார்.

படப்பிடிப்பில் பங்கேற்பு

படப்பிடிப்பில் பங்கேற்பு

இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஓட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

கணவரிடம் விசாரணை

கணவரிடம் விசாரணை

இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஓட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுடன் அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தும் உடன் தங்கியிருந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரொம்ப சீக்கிரம் போய்ட்டீங்களே

ரொம்ப சீக்கிரம் போய்ட்டீங்களே

இந்நிலையில் சித்ராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் அவரது மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளது. அதில் சித்ரா முல்லை கதாப்பாத்திர கெட்டப்பில் உள்ளார். அந்த போட்டோவுக்கு ரொம்ப சீக்கிரம் போய்ட்டீங்களே என்றும் RIP என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ப முடியல

நம்ப முடியல

அதனை பார்த்த ரசிகர்கள், பெரும் அதிர்ச்சியாக உள்ளதாகவும்.. நம்பவே முடியவில்லை.. நிச்சயம் உங்களை மிஸ் பண்ணுவோம் சித்து அக்கா என பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு முடிவு அல்ல

ஒரு முடிவு அல்ல

ஏன் இந்த அவசரம்? ஏன் இந்த முட்டாள்தனமான முடிவு? சிரித்து சிரித்து சின்னத்திரையில் பிறரை மகிழ்வித்த இவருக்கு உள்ளமெல்லாம் என்னென்ன காயமோ? எப்பொழுதும் யாருக்கும் தற்கொலை ஒரு முடிவு அல்ல..தீர்வு இல்லாத பிரச்சனை என்று ஒன்று இந்த உலகத்தில் இல்லவே இல்லை.... ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

செட்டே ஆகாது

செட்டே ஆகாது

மற்றொரு நெட்டிசனான இவர், அடேய் இவருக்கு பதில் இவருன்னு வேற யாரையும் போட்றாதீங்கடா. முல்லை இறந்துபோனாதாவே கதைய மாத்திடுங்க. வேற ஒரு ஆளெல்லாம் முல்லை கேரக்டருக்கு செட்டே ஆகாது என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X