பிக்பாஸ் தமிழ் சீசன் 5 எப்போது... கன்ஃபார்ம் செய்த விஜய் டிவி
சென்னை : தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த 4 ஆண்டுகளாக விஜய் டிவி.,யில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் மூன்று சீசன்களும் ஜுன் மாதத்தில் துவங்கப்பட்டு, செப்டம்பர் மாதம் இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.
ஆனால் கொரோனா காரணமாக நான்காவது சீசன் அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, ஜனவரி மாதம் முடிக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் கலர்ஸ் தமிழ் டிவி.,யிலா
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இனி கலர்ஸ் தமிழ் டிவி.,யில் தான் ஒளிபரப்பாகும் என வதந்தி பரவியது. ஆனால் இந்த தகவலை பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்கும் Endemol shine நிறுவனம் மறுத்துள்ளது. அத்துடன் இந்த நிகழ்ச்சி விஜய் டிவி.,யில் மட்டும் தான் ஒளிபரப்பாகும் என உறுதியாக தெரிவித்து விட்டது.

விஜய் டிவி.,யுடன் ஒப்பந்தம்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக Endemol நிறுவனத்துடன், விஜய் டிவி 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாம். இதனால் பிக்பாசின் அடுத்த 6 சீசன்களும் விஜய் டிவி.,யில் தான் ஒளிபரப்பாகும் என்பது உறுதியாகி உள்ளது.

கமலுக்கு பதில் சிம்புவா
இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 5 ஐ சிலம்பரசன் தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற மற்றொரு வதந்தி இணையதளங்களில் பரவியது. ஆனால் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க போகிறார்.
Recommended Video

அட்வான்ஸ் வாங்கிய கமல்
இதற்கான ஒப்பந்தத்தில் கமல் கையெழுத்திட்டதுடன், குறிப்பிட்ட ஒரு தொகையை அட்வான்சாகவும் வாங்கி உள்ளார். இத்துடன் இதுவரை சமூக வலைதளங்களில் வெளியான போட்டியாளர்கள் பட்டியலையும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் மறுத்துள்ளனர்.

எப்போது பிக்பாஸ் சீசன் 5
ஆரம்பத்தில் பிக்பாஸ் சீசன் 5 ஜுன் மாதம் துவங்கப்பட உள்ளதாக செய்திகள் பரவின. ஆனால் கொரோனா காரணமாக இந்த சீசனையும் அக்டோபரிலேயே துவங்க முடிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகே போட்டியாளர்கள், போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.


Click it and Unblock the Notifications











