குடியரசுத் தலைவரிடம் பட்டம் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்..குவியும் வாழ்த்து!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மோனிஷா, குடியரசுத் தலைவரின் கையால் பட்டம் வாங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில், நிகழ்ச்சிகள், சீரியல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்.

Vijay tv cook with comali fame monisha got first rank in university of madras

அதே போன்று உருவான வித்தியாசமான நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி, அனைத்து தொலைக்காட்சிகளும் விதவிதமாக சமைக்க வைத்து அதில் திறமையானவர்களை தேர்ந்து எடுத்த நிலையில், விஜய் டிவி கோமாளிகளை வைத்து சமைத்தது.

குக் வித் கோமாளி சீசன் 4: குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் தொடங்கப்பட்டு தற்போது நான்கு சீசன்கள் முடிந்துள்ளது. நான்காவது சீசனில் நடிகை சிருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகை விசித்ரா, ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, கிஷோர், ஆண்ட்ரியன் என பத்து போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

Vijay tv cook with comali fame monisha got first rank in university of madras

டைட்டில் வின்னர்: இதில், இறுதி போட்டியில் மைம் கோபி, விசித்ரா, கிரண், சிவாங்கி, ஸ்ருஷ்டி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் தேர்வான நிலையில், மைம் கோபி டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்ரா ஆகியோர் பெற்றனர். இந்த சீசனின் கோமாளியாக வந்த மோனிஷாவுக்கு சிறந்த கோமாளி பட்டம் வழங்கப்பட்டது.

பட்டம் பெற்ற மோனிஷா: இந்நிலையில்,எம்எஸ்சி எலக்ட்ரானிக் மீடியா படிப்பை முடித்துள்ள மோனிஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து பட்டம் பெற்று உள்ளார். சென்னை பல்கலைகத்தில் முதல் ரேங்க் என்ற பெருமையுடன் பட்டம் பெற்றுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் மோனிஷா. மாவீரன் படம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயனின் தங்கையாகவும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X