விஜய் டிவி தீனாவின் தாறுமாறு போட்டோஷூட்.. தலைவன் வேற ரகம் பாத்து உசாரு!
சென்னை: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பிராங்க் கால் பண்ணுவதிலும் மிகப் பிரபலமான தீனா இப்பொழுது திரைப்படங்களிலும் அசத்தி வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தில் அனைவரையும் ரசிக்க வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீனா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
தனுஷ் நடித்த திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை பிரதிபலித்தவாறு சமீபத்தில் இவர் வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இப்பொழுது செம ஸ்டைலிஷாக கோட்டும் சூட்டுமாக தீனா செய்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

பிராங்க் கால்
கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது தனித்துவமான நகைச்சுவைகளின் மூலம் தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்ட தீனா பிராங்க் கால் செய்து பலரையும் கலாய்ப்பதில் வல்லவர் ஆவார்.

வைரலாகி உள்ளது
இவ்வாறு இவர் செய்யும் பிராங்க் கால்களை கேட்கவே பல ரசிகர்கள் இன்று வரை ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரின் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கைதி திரைப்படத்தில்
இத்தனை நாட்கள் தொலைக்காட்சியில் மாஸ் காட்டி வந்த தீனா சென்ற ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கைதி திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்திருந்தார்.

அச்சு அசலாக
கைதி திரைப்படத்தை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், ஹீரோவாகவும் நடித்து வரும் வேளையில் சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த அசுரன், ஆடுகளம் உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களை பிரதிபலிக்கின்றவாறு அச்சு அசலாக அப்படியே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது மீண்டும் செம மாஸாக போட்டோ ஷூட் எடுத்து அசத்தி வருகிறார்.

லேட்டஸ்ட் போட்டோஷூட்
கருப்பு மற்றும் வெள்ளை என இரு விதமான ஜிகு ஜிகு கோட்டு சூட்டுகளில் வித்தியாசமாக காட்சியளிக்கும் தீனாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இப்போது இணையதளத்தில் தாறுமாறாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











