ஷிவானியிடம் ஆரி கேட்ட அந்த கேள்வி.. விஜய் டிவி அவசரம் அவசரமாய் டெலிட் செய்த புரமோ!
சென்னை: விஜய் டிவி அவசரம் அவசரமாய் டெலிட் செய்த புரமோ வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இன்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் முதல் நாள் அனுபவம் ஒளிப்பரப்பட்டது.
இதற்காக காலை முதலே புரோமோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை தயார் படுத்தி வந்தனர்.

ஸ்கோர் செய்த நடிகைகள்
முதல் புரமோவாக வாத்தி கம்மிங் பாடலுக்கு ஹவுஸ்மேட்ஸ் மரண குத்து குத்திய காட்சி புரமோவாக ஒளிபரப்பப்பட்டது. இதில் கேப்ரில்லாவும் ஷிவானியும்தான் ஸ்கோர் செய்தனர். அதனை பார்த்த நெட்டிசன்கள், 2கே கிட்ஸ்க்கு இவர்கள்தான் என்றனர்.

ரசிகர்கள் கடுப்பு
அதனை தொடர்ந்து இரண்டாவது புரமோவை வெளியிட்டனர். அதில் சம்யுக்தா, சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் சேர்ந்து ஷிவானியை கார்னர் செய்வதாக இருந்தது. அதனை பார்த்த நெட்டிசன்களும் ஷிவானியின் ரசிகர்களும் செம கடுப்பாகிவிட்டனர்.

டெலிட் செய்யப்பட்ட புரமோ
அதன்பிறகு மூன்றாவதாய் ஒரு புரமோவை விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தது. ஆனால் ஷேர் செய்த சில நிமிடங்களிலேயே அந்த புரமோவை அவசரம் அவசரமாய் டெலிட் செய்துவிட்டார் விஜய் டிவியின் டிவிட்டர் அட்மின்.

ஜிம்மில் ஷிவானி
ஆனால் அந்த புரோமோ வெவ்வேறு சைட்டுகளில் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது அந்த புரமோவில் ஷிவானிக்கு புரோக்கன் ஹார்ட் கொடுக்கப்பட்ட காட்சிகளும், ஜிம்மில் பாலா மற்றும் சோம சேகருடன் ஷிவானி பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

எவ்ளோ ஃபேன்ஸ்..
அப்போது நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்றும், ஜாலியா இருங்க ஷிவானி என்றும் அவரை தேற்றுகின்றனர். மேலும் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் எவ்ளோ ஃபேன்ஸ் இருக்காங்க என்றும் அவரை சந்தோஷப்படுத்துகின்றனர்.

பிளான் இல்லை
தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ஆரி மற்றும் சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் ஷிவானி. அப்போது எந்த கேம் பிளானும் இல்லாமல் எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைத்தான் செய்கிறேன் என்று கூறுகிறார் ஷிவானி.

ஆரி கேட்ட கேள்வி
அப்போது பேசும் ஆரி, நீங்கள் உங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு வீடியோ ஷேர் செய்கிறீர்களே.. என்னவாக வேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை ஷேர் செய்கிறீர்கள் என்கிறார்.. அதற்கு பதிலே சொல்ல முடியாமல் திணறுகிறார் ஷிவானி.

ரம்யா தொப்புள்
இந்த புரமோவைதான் அவசரம் அவசரமாய் டெலிட் செய்துவிட்டு ரம்யா பாண்டியன் தொப்புளை காட்டி விளையாடியதையும் அறந்தாங்கி நிஷா விழுந்து வாரியதையும் கொண்டிருந்த புரமோவை வெளியிட்டனர்.


Click it and Unblock the Notifications