twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாஜி மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த சனம் ஷெட்டி.. அந்த சீனையே டெலிட் பண்ணித் தூக்கிட்டாங்க!

    |

    சென்னை: முதல் புரமோவை மட்டும் இல்லைங்க, சனம் ஷெட்டி அடிஷனல் ஷீட் வாங்கி, பாலாஜி முருகதாஸ் மீது வைத்த பரபரப்பு குற்றச்சாட்டையே விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தூக்கி விட்டது.

    இன்றைய நிகழ்ச்சிக்கான ரஷ் வந்ததும் விவகாரம் புரியாமல் நம்ம பிக் பாஸ் எடிட்டர், போகிற போக்கில் சனம் எழுதிய கம்ப்ளைண்ட் லெட்டர் ஷாட்டை வைத்து விட்டார்.

    அது சர்ச்சையை கிளப்பவே, அந்த காட்சியை மட்டுமின்றி முதல் புரமோவையே விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது.

    ஷட் அப் எமோஜிக்கு சூப்பர் விளக்கம்.. நல்லா ஐஸ் வைக்கிறாருய்யா ரியோ.. அவரோட கேம் பிளான் தான் என்ன?ஷட் அப் எமோஜிக்கு சூப்பர் விளக்கம்.. நல்லா ஐஸ் வைக்கிறாருய்யா ரியோ.. அவரோட கேம் பிளான் தான் என்ன?

    பாலாஜி மீது புகார்

    பாலாஜி மீது புகார்

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் 31வது எபிசோடில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4ம் சீசன் ஆரம்பித்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில், வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்களிடம் உள்ள புகார்களை வாதாட கோர்ட் செட்டப் அமைக்கப்பட்டது. சுசித்ரா ஜட்ஜாக உட்கார, சனம் ஷெட்டி பாலாஜி மீது கொடுத்த புகார் முதலாவதாக எடுத்துக் கொள்ளப் பட்டது.

    அடிஷனல் ஷீட்

    அடிஷனல் ஷீட்

    அதற்கு முன்னதாக கன்ஃபெஷன் ரூமில் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி மீது புகார் அளித்தார். சனம் ஷெட்டி பாலா மீது புகார் அளித்தார். சுரேஷ் தாத்தா சனம் ஷெட்டி மீதும், ஆரியும் சம்யுக்தாவும் மாற்றி மாற்றியும் புகார் அளித்துக் கொண்டனர். சனம் ஷெட்டி அடிஷனல் ஷீட் எல்லாம் பிக் பாஸிடம் கேட்டு தனது குறைகளை எழுதினார்.

    சனம் பாலா வழக்கு

    சனம் பாலா வழக்கு

    சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸின் வழக்கை முதலாவதாக விசாரித்த நீதிபதி சுசித்ரா, இரு தரப்பு வாதங்களையும் கேட்டார். பின்னர், அவர்களுக்கு யாரெல்லாம் சப்போர்ட் பண்றீங்களோ அவங்களாம் வாங்கன்னு கூப்பிட பாலா தரப்பில் சம்யுக்தா, அர்ச்சனா எல்லாம் வர, சனம் தரப்பில் ரம்யா பாண்டியன், ஆரி இடம்பெற்றனர்.

    வழக்கில் வென்ற பாலா

    வழக்கில் வென்ற பாலா

    சனம் ஷெட்டி பாலாவை உதைத்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டது. சனம் ஷெட்டியை பார்த்து பாலா தறுதலை என்ற வார்த்தையை பயன்படுத்தியது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டது. நீதிபதி கடைசியில் என்ன பண்ணிட்டார் என்றால், மெஜாரிட்டி பார்த்து பாலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லி விட்டார்.

    தறுதலைன்னு காமெடிக்கு சொன்னாங்களாம்

    தறுதலைன்னு காமெடிக்கு சொன்னாங்களாம்

    தறுதலை என்கிற வார்த்தை சனம் ஷெட்டியை ரொம்பவே ஹர்ட் பண்ணிய நிலையில், பாலா பற்றி அத்தனை பெரிய புகார் கடிதத்தையும் அவர் கொடுத்தார். ஆனால், அதை எல்லாம் விட்டு விட்டு, தறுதலை என்பதை சீரியஸா யாரெல்லாம் பார்க்குறீங்க என சுச்சி கேட்ட உடன் ஆரியை தவிர சனம் பக்கம் ஆதரவுக்கு நின்ற யாருமே கூட கை தூக்கவில்லை. காமெடியா யார் பார்க்குறீங்க என்றதும் எல்லாருமே கோரஸா கை தூக்கினாங்க, பிக் பாஸ் வீட்டில நீதி கிடைக்கும்னு எதிர்பார்த்தா எப்படி?

    டெலிட் செய்யப்பட்ட காட்சி

    டெலிட் செய்யப்பட்ட காட்சி

    ஆனால், இதில் ரொம்ப சீரியஸான பிரச்சனையை விஜய் டிவி அப்படியே மூடி மறைத்து விட்டு நகர்ந்து விட்டது. சனம் ஷெட்டி அழகிப் போட்டியில் பட்டம் வெல்ல அட்ஜஸ்ட் பண்ணியதாக பாலா பேசிய குற்றச்சாட்டை சனம் முன் வைத்தது குறித்து, விவாதிக்கப்படவும் இல்லை. முதல் புரமோவில் வந்து டெலிட் ஆன அந்த காட்சிகள், எபிசோடிலும் இடம் பெற வில்லை. சனம் ஷெட்டி தனது புகாரை எழுதும் போது, அவரது காட்சிகளுக்கு பதிலாக, டைனிங் டேபிளில் ரியோ பேசிக் கொண்டிருந்த காட்சிகளை போட்டு சரி கட்டி விட்டார்கள்.

    English summary
    Vijay Tv deletes the controversial Sanam Shetty complaint against Balaji Mruugadoss scene from Bigg Boss show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X