என்னது.. கஸ்தூரிக்கு பிக்பாஸ்க்கான சம்பளம் கொடுக்கலயா.. விஜய் டிவி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

சென்னை: நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதற்கான சம்பளத்தை இன்னும் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு விளக்கம் அளித்து விஜய் டிவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

பிரபல நடிகையான கஸ்தூரி அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். அரசியல் விமர்சகராகவும் உள்ளார் கஸ்தூரி.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள கஸ்தூரி பல்வேறு விஷயங்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்.
இதனால் சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

நடிகை கஸ்தூரி கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அவர், பலரின் கோபத்திற்கும் ஆளானார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினார்.

சம்பளம் கொடுக்கவில்லை

சம்பளம் கொடுக்கவில்லை

இந்நிலையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட தனக்கு இதுவரை அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு வருடத்திற்கும் மேலாக இன்னும் எனக்கு சம்பளம் தரப்படவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதே, ஆதரவற்ற குழந்தைகளின் ஆப்ரேஷன் செலவுக்காகத்தான்.

டிவீட்டால் பரபரப்பு

டிவீட்டால் பரபரப்பு

நான் எப்போதுமே பொய் வாக்குறுதிகளை நம்புவதில்லை. இதிலும் இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்று கூறியிருந்தார். வரும் அக்டோபர் 4-ம் தேதி தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் தொடங்கப்பட உள்ள நிலையில் கஸ்தூரி தனக்கு இன்னும் சம்பளம் தரப்படவில்லை என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பொறுப்பான சேனல்

பொறுப்பான சேனல்

இந்நிலையில் கஸ்தூரியின் குற்றச்சாட்டு குறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் நாங்கள் ஒரு பொறுப்பான சேனல். ஒப்பந்த விதிமுறைகளின்படி எங்கள் நிகழ்ச்சிகளில் பணிபுரியும் அனைவருக்கும் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

ஜிஎஸ்டி மட்டும்தான் பாக்கி

ஜிஎஸ்டி மட்டும்தான் பாக்கி

பிக் பாஸ் தமிழில் கஸ்தூரி ஷங்கரின் பங்கேற்புக்கான தொழில்முறை கட்டணம் 2019 சீசனில் அவருக்கு செலுத்தப்பட்டாலும், அதற்கான ஜிஎஸ்டி தொகை அவரது ஜிஎஸ்டி தாக்கல்களில் பொருந்தாததால் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரிடமிருந்து சில விவரங்கள் மற்றும் ஆவணங்களை பெற நாங்கள் காத்திருக்கிறோம்.

இன்வாய்ஸ் வரல

இன்வாய்ஸ் வரல

அது கிடைத்த பிறகு ஜிஎஸ்டி தொகை வழங்கப்படும். சேனலின் மற்றொரு நிகழ்ச்சியில் அவரது கலந்து கொண்டதற்கான இன்வாய்ஸையும் அவர் சமர்ப்பிக்க தவறிவிட்டார், இதன் காரணமாக எங்களால் அந்த கட்டணம் செலுத்த முடியவில்லை." இவ்வாறு விஜய் டிவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X