விஜய் சார்.. அந்த அணைப்புக்கு என்ன அர்த்தம்..டிரெண்டாகும் டிடியின் பதிவு!

சென்னை: லியோ படத்தின் வெற்றி விழாவை தொகுத்து வழங்கிய டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் குறித்து நெகிழ்ச்சியான பதிவினை ஷேர் செய்துள்ளார்.

லலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின், சாண்டி, பிக் பாஸ் ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ந் தேதி லியோ படம் வெளியானது.

Vijay tv fame anchor dd talk about vijay hugging leo success meet

இந்த படம் 12 நாட்களில் 540 கோடி ரூபாயை வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோ வெற்றி விழா: மிகப்பெரிய வசூலை பெற்ற லியோ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சென்னையில் நேரு உள் விளையாட்டரங்கில் விழா நடைபெற்றது. அதில், விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினார்கள். லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதால், விஜய்யின் பேச்சை கேட்க முடியாமல் போன ரசிகர்களுக்கு விஜய் இன்ப விருந்து வைத்து பேசினார்.

Vijay tv fame anchor dd talk about vijay hugging leo success meet

விஜய் பேச்சு: அதில், புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான்... புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான்... நடிகர் திலகம் என்றால் ஒருத்தர் தான்... உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான்... தல என்றால் ஒருத்தர் தான்... தளபதி என்றால் உங்களுக்கு தெரியும். மன்னர்களுக்கு கீழ் தான் அவங்க இருப்பாங்க. இங்கே மக்கள் தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன் என்று பேசி சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றிவைத்தார். இந்த வெற்றிவிழா நிகழ்ச்சி நாளை மாலை 6.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

Vijay tv fame anchor dd talk about vijay hugging leo success meet

நெகிழ்ச்சி பதிவு: இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் மேடைக்கு வந்து கட்டியணைத்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், விஜய் சார், அந்த அணைப்பு எனக்கு என்ன அர்த்தம் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது....நான் இங்கே அமைதியாக இருக்கலாம்... ஆனால், உள்ளே நான் இரத்தக்களரியாக குதிக்கிறது...நன்றி விஜய் சார் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: dd leo success meet டிடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X