DD Watch Collections:விஜய் டிவி திவ்யதர்ஷினி இத்தனை வாட்ச் வைத்து இருக்கிறாரா?விலை என்னனு தெரியுமா?

சென்னை : காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வளைத்துப் போட்டவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்த இவர், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்கள், டப் நடிகர்களை இன்டர்வியூ எடுத்து வருகிறார்.

தற்போது இவர் தன்னிடம் எத்தனை வாட்ச் உள்ளது என்பதை தனது ரசிகர்களுக்கு காட்டி உள்ளார்.

Vijay TV Fame Divyadarshini Stylish Watch Collections and its Cost

திவ்யதர்ஷினி : விஜய் டிவியில் ஆங்கர்களாக இருந்து பிரபலமடைந்தவர்கள் ஏராளமானோருக்கு சினிமா கிடைத்துள்ளது. அந்த வரிசையில் திவ்யதர்ஷினிக்கும் முக்கியமான பங்கு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக இவர் இருந்து வருகிறார். விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சினிமா பிரபலங்களை, அவர்களது கேரியர் மற்றும் சொந்த வாழ்க்கையை குறித்து பேட்டி எடுப்பதில் திறமையானவர்.

வெள்ளித்திரையில் : சின்னத்திரையில் பிரபலமானதை அடுத்து வெள்ளித்திரையிலும் கணிசமான படங்களில் நடித்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி, சர்வம் தாளமயம், காபி வித் காதல், துருவ நட்சத்திரம், ஜோஸ்வா இமைபோல் காக்க போன்ற படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் வருண் லீட் ரோலில் நடித்திருந்த இப்படத்தில் டிடி சிசிஐடி அதிகாரியாக நடித்துள்ளார்.

Vijay TV Fame Divyadarshini Stylish Watch Collections and its Cost

ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் : டிடிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வருகிறார். ஒரு சில, தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தனுஷ் நடித்த வாத்தி இசைவெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.

Vijay TV Fame Divyadarshini Stylish Watch Collections and its Cost

DD styles : இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் திவ்ய தர்ஷினி DD styles என்று தனது ஸ்டைல் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோவில் டிடி விதவிதமான கடிகாரத்தையும் அதன் விலையையும் பட்டியலிட்டுள்ளார். இதில் பிளாக் அண்ட் சில்வர் வாட்ச், லேடி டயானா கட்டி இருந்தாங்க அதைப்பார்த்து இந்த வாட்சை வாங்கினேன், அடுத்ததாக longines வாட்ச், இதை மலேஷியா மற்றும் துபாயில் தேடி அலைந்து வாங்கினேன் என்று தன்னிடம் உள்ள வாட்சை ஒவ்வொன்றான காட்டினார் டிடி. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X