வித்யாசாகர் மகனுடன் நெருக்கமாக இருக்கும் சிவாங்கி..ஒருவேளை காதலா இருக்குமோ கொளுத்திப்போடும் பேன்ஸ்!
சென்னை: இசையமைப்பாளர் வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி நெருக்கமாக இருக்கும் வீடியோவைப்பார்த்து இருவரும் காதலிப்பதாக ரசிகர்கள் கொளுத்திப்போட்டுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி.
இவர் நன்றாக பாடல் பாடி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை, ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடகியானார்.

சிவாங்கி: விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் அளவு வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 1 வெளியானதை தொடர்ந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை உள்ளிட்டோரின் அட்டகாசத்தை ரசித்தனர்.
சர்ச்சை ஏற்பட்டது: குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் குக்காக மாறி சூப்பராக சமைத்து அசத்தினார். மேலும் சிவாங்கி அட்டகாசமாக சமைத்து, நேரடியாக பைனலிஸ்ட் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமையலே தெரியாத சிவாங்கி முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு எவ்வாறு தேர்வானார் என்ற சர்ச்சையும் எழுந்தது.

காதலிக்கிறாரா சிவாங்கி: இந்நிலையில், சிவாங்கி வித்யாசாகரின் மகனான ஹர்ஷ்வர்தனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் பாடி இருந்தார். அப்போது முதல் இருவரும் நண்பர்களாக பழகி வரும் நிலையில், அவர்கள் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் செய்தியை கொளுத்திப்போட்டுள்ளனர். ஆனால், இருவரும் காதலிக்கிறோம் என்று வெளிப்படையாக இதுவரை அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











