பெண்ணை கட்டிப்பிடித்து லிப்கிஸ்.. குக் வித் கோமாளி சுனிதாவின் விவகாரமான போட்டோ!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா பெண்ணை கட்டிப்பிடித்து லிப் கிஸ் கொடுக்கும் விவகாரமான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay tv fame Sunita gogoi Flakka movie poster trending on social media

விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் தான் சுனிதா.

நடிகை சுனிதா: அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனிதா, ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதன் பின் ஒரு சில சீரியல்களில் நடித்த இவர், தனுஷ் நடித்த த்ரி திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்: அதனை தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், குக் வித் கோமாளி நான்காவது சீசனிலும் கோமாளியாக கலக்கினார். தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது.

Vijay tv fame Sunita gogoi Flakka movie poster trending on social media

என்ன சுனிதா இதெல்லாம்: இந்நிலையில், நடிகை சுனிதா, FLAKKA என்ற படத்தில் லெஸ்பியனாக நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு சில ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் இந்த மாதிரி லெஸ்பியன் படம் எல்லாம் வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர். இந்த போஸ்டர் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X