விரக்தி அடைந்தேன்… இருப்பினும் மன உறுதியுடன் போராடினேன்… மனம் திறந்த அஸ்வின் !

சென்னை : தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் துணை நடிகராக வலம் வந்தவர் அஸ்வின்.

தற்போது அஸ்வின், ஹரிஹரன் எழுதி இயக்கும் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அஸ்வின் தன் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து ஒரு பேட்டியில் உருக்கத்துடன் பகிர்ந்துள்ளார்.

புகழின் உச்சிக்கு

புகழின் உச்சிக்கு

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார் அஸ்வின். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் புகழின் உச்சிக்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.

டான் படத்தில்

டான் படத்தில்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்துள்ளது. ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் ஷிவாங்கி நடிக்க உள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

இதேபோல், குக் வித் கோமாளியில் பங்குபெற்ற தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதே போல அஸ்வின், புகழ் இருவரும் இணைந்து என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

விரக்தி அடைந்தேன்

விரக்தி அடைந்தேன்

இந்நிலையில், நடிகர் அஸ்வின் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நல்ல வாழ்க்கைக்கும், என் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பணம் தேவை என்பதை உணர்ந்தேன் என்ன செய்வது என்று எனக்கு தெரியல, ஒரு கட்டத்தில் நான் மிகவும் விரக்தி மனநிலைக்கு சென்று விட்டேன். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி போராடுவது என்ற எண்ணம் வந்தது ஆனால், நிச்சயம் எதோ ஒன்றை சாதிக்கனும் என்கிற மன உறுதி மட்டும் என்கிட்ட இருந்தது அந்த வெறிதான் என்னை உயர்த்தி இருக்குனு நான் நினைக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X