Don't Miss!
- News
தாறுமாறாக வந்த ஆம்னி பேருந்து! ஹை வேஸில் அலறல்.. சென்னை-மார்த்தாண்டம் சாலையில் விபத்து.. 2 பேர் பலி
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Technology
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சூர்யா தேவியை தாக்கிய வழக்கு..வசமா சிக்கிய நாஞ்சில் விஜயன்..ஜாமீன் கிடைத்ததா?
சென்னை : டிக் டாக் புகழ் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் நடிகர் நாஞ்சில் விஜயனுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த சேனலில், நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக பீட்டரை திருமணம் செய்து கொண்டது பற்றி, அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.
Bigg Boss Tamil 6: கன்ஃபார்ம்..இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போறது இவர் தான்?

டிக் டாக் சூர்யா தேவி
நாஞ்சில் விஜயன் வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், டிக் டாக் செயலி மூலம் பிரபலமான சூர்யா தேவி, வனிதா குறித்தும், மூன்றாவதாக அவர் செய்து கொண்ட திருமணம் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். ஒரு பக்கம் நாஞ்சில் விஜயன் ஆதரவு தெரிவிக்க, ஒரு பக்கம் சூர்யா தேவி வனிதாவை கழுவி ஊற்ற இணையமே திக்குமுக்காடிப்போனது.

சூர்யா தேவி கைது
அத்து மீறி பேசிய சூர்யா தேவியால் கடுப்பான வனிதா விஜயகுமார் சூர்யா தேவி மீது புகார் கொடுத்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த சூர்யா தேவி மீண்டும் வனிதா குறித்தும் நாஞ்சில் விஜயன் குறித்தும் படுமோசமாக பேசி வந்தார்.

உருட்டு கட்டையால் தாக்கினார்
இதையடுத்து, சூர்யா தேவி, தன் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுபற்றி, நியாயம் கேட்பதற்காக நாஞ்சில் விஜயனின் வீட்டிற்கு சூர்யா தேவி சென்றபோது, உருட்டுக்கட்டையால், அடித்துவிட்டதாகவும், தரக்குறைவான வார்த்தையால் திட்டியதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்தார்.

நாஞ்சில் விஜயன் ஜாமீன்?
சூர்யா தேவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பல முறை சம்மன்கள் அனுப்பியும் நாஞ்சில் விஜயன் ஆஜராகாததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.