Don't Miss!
- News
ஹிட் அடிச்ச இந்தியா.. அதுவும் கள்ளக்காதலில்.. அதென்ன "கிளீடன்".. குவியும் பெண்கள்.. என்னன்னு பாருங்க
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Finance
1000 பேரை கொத்தாகப் பணிநீக்கம் செய்தும் நிறுவனம்.. ஊழியர்கள் பீதி..!
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வனிதாவுக்கு ஆதரவு..சூர்யா தேவிக்கு அடி..நடிகர் நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
சென்னை : டிக் டாக் புகழ் சூர்யா தேவியை தாக்கிய வழக்கில் நடிகர் நாஞ்சில் விஜயன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில், கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பக்காவாக செய்யும் நாஞ்சில் விஜயன் பெண் வேடத்தில் அசத்துவார்.
பெண் வேடத்தில் சேலையை கட்டிக்கொண்டு இவர் வருவதைப் பார்த்தாலே சிரிப்பு குபீரென்று வந்து விடும் அந்த அளவுக்கு அந்த கெட்டப் அவருக்கு பொருத்தமாக இருக்கும்.
சூர்யா தேவி மண்டை உடைப்பா? நாஞ்சில் விஜயனின் நக்கல் இன்ஸ்டா பதிவ பாத்தீங்களா மக்களே!

நடிகர் நாஞ்சில் விஜயன்
காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில், நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது பீட்டரை திருமணம் செய்து கொண்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

டிக் டாக் சூர்யா தேவி
நாஞ்சில் விஜயன் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில்,டிக் டாக் செயலி மூலம் பிரபலமான சூர்யா தேவி, வனிதா குறித்தும், மூன்றாவதாக அவர் செய்து கொண்ட திருமணம் குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். ஒரு பக்கம் நாஞ்சில் விஜயன் ஆதரவு தெரிவிக்க, ஒரு பக்கம் சூர்யா தேவி வனிதாவை கழுவி ஊற்ற இணையமே திக்குமுக்காடிப்போனது.

சூர்யா தேவி கைது
அத்து மீறி பேசிய சூர்யா தேவியால் கடுப்பான வனிதா விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த சூர்யா தேவி தான் வசித்து வரும் வீட்டிற்கு ரவுடிகளை அனுப்பி தாக்கியதாக நாஞ்சில் விஜயன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

உருட்டுக்கட்டையால் அடித்தார்
இதுபற்றி, நியாயம் கேட்பதற்காக நாஞ்சில் விஜயன் வீட்டிற்கு சூர்யா தேவி சென்றபோது, பெரிய பெரிய உருட்டுக்கட்டையை வைத்து மண்டையில் அடித்துவிட்டதாகவும், தரக்குறைவான தகாத வார்த்தையால் திட்டியதாகவும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சூர்யா தேவி புகார் கொடுத்திருந்தார்.

நாஞ்சில் விஜயன் கைது
சூர்யா தேவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பல முறை சம்மன்கள் அனுப்பியும் நாஞ்சில் விஜயன் முறையாக விசாரணைக்கு ஆஜராகாததால் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். நாஞ்சில் விஜயன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.