Don't Miss!
- News
பணம் வீணாகக் கூடாது..பட்ஜெட்டுக்கு முன் விரைவாக முடிங்க..அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சாகசம்.. வழக்கில் சிக்கும் நடிகர் புகழ்!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ்.
இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்புகளை குவித்து வருகிறது. முன்னணி நடிகர்களுடன் தற்போது இவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துக் கொண்டார் புகழ். இந்த திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
மிஸ்
யூ
மாமா..
வடிவேலு
பாலாஜி
நினைவு
தினம்..
உருக்கமான
போஸ்ட்
போட்ட
குக்
வித்
கோமாளி
புகழ்!

குக் வித் கோமாளி பிரபலம் புகழ்
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவரை ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் நிறுத்தியது. தன்னுடைய டைமிங் காமெடி சென்ஸ் மூலம் அனைவரையும் கவர்ந்து தற்போது புகழ் வெளிச்சத்தில் உள்ளார்.

அடுத்தடுத்த படங்களில் நடிப்பு
குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியின் நிறைவிலேயே 8 படங்களில் இவர் கமிட்டாகியிருந்தார். தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கூட இவரால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

முன்னணி நடிகர்களுடன் நடிப்பு
அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் புகழ், அடுத்ததாக Zoo Keeper என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார்.

சர்ச்சைக்குள்ளான பைக் பயணம்
இவர் சமீபத்தில் செய்த செயல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பைக்கில் ஹெல்மெட் இல்லாமல் புகழ் சாகச பயணம் செய்துள்ளார். இதன் வீடியோவை தனது சமூக வலைதளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில் இந்த பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் பைக் பயணம்
இந்த வீடியோவில் தனது யமஹா பைக்கை சாலையில் ஓட்டி வருகிறார் நடிகர் புகழ், மங்கி குல்லா, முகக்கவசம் அணிந்துக் கொண்டு பயணம் மேற்கொள்கிறார். பின்னர் முக்கவசம், மங்கி குல்லாவை அகற்றிவிட்டு, கை விரலை உயர்த்தி காட்டி வாகனத்தை ஓட்டுகிறார். மீசையை முறுக்கிவிட்டு வேகமாக எதிரில் வரும் வேன் ஒன்றை கடந்து செல்கிறார். இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

புகழ் மீது வழக்கு உண்டா போலீஸாருக்கு நெட்டிசன்கள் கேள்வி
பொதுமக்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோரை சமூக வலைதளங்களில் ஃபாலோயர்ஸாக வைத்து பிரபலமாக இருக்கும் நடிகர் ஒருவர் அதை கடைப்பிடிக்காமல் வாகனம் ஓட்டுவதை பார்க்கும் இளைஞர்களும் அதை கடைபிடிக்க முயல்வார்கள். தற்போது ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீஸார் அபராத நோட்டீஸ் அனுப்புகின்றனர். பிரபலமாக உள்ள ஒரு நடிகர் இவ்வாறு நடந்துக் கொண்டுள்ளார். அவர் வீட்டுக்கும் போலீஸார் அபராத நோட்டீஸ் அனுப்புவார்களா? அல்லது பிரபலம் என்பதால் அவருக்கு சலுகை எதுவும் உண்டா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பதிவு
சமீபத்தில் ஜிபி முத்துவை வைத்து அபாயகரமாக பைக் ஓட்டிய டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து, ஜாமீனில் வெளியில் விட்டனர். இந்த சம்பவம் நிகழ்ந்து சில தினங்களிலேயே புகழ், ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி, அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.