பிக்பாஸில் ரெட் கார்டு.. பிரதீப்புக்கு விஜய் டிவி கொடுத்திருக்கும் வாய்ப்பு இதுவா?.. செம ஜாக்பாட்

சென்னை: Pradeep Antony (பிரதீப் ஆண்டனி) பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சூழலில் அவருக்கு விஜய் டிவி ஒரு வாய்ப்பு வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை அனன்யா, விஜய் வர்மா, யுகேந்திரன், அன்னபாரதி, வினுஷா, ஐஷு உள்ளிட்டோர் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். எழுத்தாளர் பவா செல்லதுரை நிகழ்ச்சிக்குள் வந்த சில வாரங்களிலேயே தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி தானாகவே வீட்டிலிருந்து வெளியேறினார்.

Vijay TV is given Chance to Pradeep Antony for Direct a Web series in Hot Star

பிரதீப் ரெட் கார்டு: இதில் உச்சக்கட்ட பஞ்சாயத்தாக அமைந்தது என்னவென்றால் அது பிரதீப் ஆண்டனி பஞ்சாயத்துதான். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்தே தன்னுடைய நோக்கம் இந்த சீசனின் டைட்டிலை தட்டி செல்வதுதான். அது தன்னுடைய சினிமா இயக்கும் ஆசைக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஓபனாகவே சொல்லித்தான் விளையாட ஆரம்பித்தார்.

டஃப் போட்டியாளர்: அதன் காரணமாக பயங்கர ஸ்ட்ரேட்டஜியோடு விளையாடிய அவர் டஃப் போட்டியாளராகவே கருதப்பட்டார். எனவே நிச்சயம் அவர் இந்த சீசனின் டைட்டில் வின்னராக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் அவர் மீது ஹவுஸ்மேட்ஸில் சிலர் வைத்த குற்றச்சாட்டு பகீர் கிளப்பின. இதனையடுத்து அவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இன்னொரு வாய்ப்பு?: கமல் ஹாசனின் அந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாகவே இந்தப் பஞ்சாயத்துதான் டாப்பில் இருக்கிறது. இந்த சூழலில் தனக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கினால் மிகச்சிறப்பாக விளையாடுவேன் என்று தூது விட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை தன்னுடைய விளக்கத்தின் மூலம் உணர்த்திவிட்டார் கமல் ஹாசன்.

போய் வேலையை பாருங்க: இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் பிரதீப் ஆண்டனியோ ரொம்ப யோசிக்காதீங்க. வாழ்க்கையை கொண்டாடுங்கள். இந்த ஆதரவை எல்லாம் நான் படம் இயக்கும்போது கொடுங்கள் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர் விரைவில் படம் இயக்க கமிட்டாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

விஜய் டிவி வழங்கிய வாய்ப்பு: இந்நிலையில் பிரதீப் ஆண்டனிக்கு பெரிய வாய்ப்பு ஒன்றை விஜய் டிவி வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்த விவகாரத்தில் சேனல் நிர்வாகமும், நிகழ்ச்சி குழுவும் கெட்ட பெயரை சம்பாதித்துவிட்டன. எனவே அதனை போக்கும் விதமாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாருக்கு ஒரு வெப் தொடர் இயக்கும் வாய்ப்பை பிரதீப் ஆண்டனிக்கு சேனல் வழங்கியிருப்பதாகவும் அதற்கான கதையை தயார் செய்யும்படி பிரதீப்பிடம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை பிரதீப் தயார் செய்யும் கதை பிடித்துப்போகும்பட்சத்தில் விரைவில் அவரை இயக்குநராக காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X