சும்மா சொல்லுங்க.. லிஸ்ட் மேட்ச் ஆகுதா பாப்போம்.. ரசிகர்களுக்கு டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விஜய் டிவி ரசிகர்களுக்கு ஒரு டாஸ்க் வைத்துள்ளது.

Recommended Video

Bigg Boss 4 Tamil : Final List is ready! Kamal Hassan

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுதான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து தினமும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு டாஸ்க்

ரசிகர்களுக்கு டாஸ்க்

தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் இம்மாதம் 18 ஆம் தேதி முதல் குவாரண்டைனில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில், ரசிகர்களுக்கு என ஒரு டிவிஸ்ட்டை வைத்து டாஸ்க் கொடுத்துள்ளது.

மேட்சாகுதான்னு பார்ப்போம்

மேட்சாகுதான்னு பார்ப்போம்

அதாவது, சும்மா சொல்லுங்க.. லிஸ்ட் மேட்ச் ஆகுதான்னு பார்ப்போம்.. என கெஸ் தி கன்டெஸ்டன்ட்ஸ் என ஒரு பதிவை ஷேர் செய்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள், அப்போ போட்டியாளர்கள் தேர்வு முடிந்துவிட்டாதா என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளனர்.

உறுதியாகிவிட்டது

உறுதியாகிவிட்டது

அனுமானத்தின் அடிப்படையில் போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது, விஜய் டிவியின் இந்தப் பதிவின் மூலம் போட்டியாளர்கள் தேர்வு உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது.

பெயர்கள் பட்டியல்

பெயர்கள் பட்டியல்

இந்நிலையில் விஜய் டிவியின் இந்த கேமில் ரசிகர்கள் பலரும் பங்கேற்று, தாங்களின் அனுமான பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகின்றனர். அதன்படி பெரும்பாலானோர், ரியோ ராஜ், ஆர் ஜே வினோத், கருன் ராமன், சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், அம்ரிதா அய்யர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளனர்.

15 பேரின் பெயர்கள்

15 பேரின் பெயர்கள்

மற்றொரு நெட்டிசனான இவர், தன்னுடைய யூகம் என, ஜிபி முத்து, ஷிவானி, வாணி போஜன், மதுரை முத்து ஆர்ஜே பாலாஜி, சிவா, சிங்கம் புலி பட ஆண்ட்டி, மதன் கௌரி, ரகசியா, ஹரிஜா, அம்ரிதா அய்யர், சூர்யா தேவி, தீனா, சடகோபன் ரமேஷ், டிடி என 15 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஜே விக்கி

ஆர்ஜே விக்கி

மற்றொரு நெட்டிசனான இவர், கருன் ராமன், பாலாஜி முருகதாஸ், அம்ரிதா அய்யர், ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ஷாலு ஷம்மு, விஜய் டிவி புகழ், சஞ்சனா சிங், அனு மோகன், ஆர் ஜே விக்கி, லக்ஷ்மி மேனன் ஆகியோரின் பெயரை குறிப்பிட்டுள்ளார்.

சன்னி லியோன்

சன்னி லியோன்

இதனை பார்த்த நெட்டிசன்கள், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு ராமரை உள்ளே அனுப்புங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இன்னும் சிலர் சன்னி லியோனை கூட்டிட்டு வாருங்கள் என்றும் கூறியுள்ளனர். சிலர் நீங்களே சொல்லிடுங்கப்பா என்றும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X