Don't Miss!
- News
சொந்தமாக 140 கார்கள்.. கோடீஸ்வர அமைச்சர்.. பாதுகாப்பு அதிகாரியாலேயே பலி.. யார் இந்த நபா கிஷோர் தாஸ்?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Finance
மீண்டும் இப்படி ஒரு பிரச்சனையா.. மாருதி சுசூகி கவலை.. இனி என்ன செய்ய போகிறதோ?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ரசிகர்களின் பேவரைட் சீரியல்களை நிறுத்தப்போகும் பிரபல சேனல்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை தொடர்களுக்கும் சேனல்களுக்கும் கொடுத்து வருகின்றன. அந்த அளவில் தொடர்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.
நிகழ்ச்சிகளுக்கு இணையான போட்டிகளை சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்கள் தொடர்ந்து தொடர்களுக்காகவும் மேற்கொண்டு வருகின்றன.
இதனிடையே விஜய் டிவியில் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்கள் குவித்து வருகின்றன. இதில் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளன.
ராதிகா வீட்டில் இனியா.. கலக்கத்தில் பாக்கியா செய்த செயல்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!

களைகட்டும் நிகழ்ச்சிகள்
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற சேனல்களில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து களைகட்டி வருகின்றன. வாரயிறுதி வந்துவிட்டால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வித்தியாசம் வித்தியாசமான நிகழ்ச்சிகளை காண்பதில் ரசிகர்களின் ஆர்வம் இந்த சேனல்களை மேலும் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுக்க வைக்கின்றன. இதன்மூலம் டிஆர்பியும் அதிகரிக்கிறது.

முக்கியத்துவம் பெறும் சீரியல்கள்
இதனிடையே நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை இந்த சேனல்கள் தொடர்களுக்கும் கொடுத்து வருகின்றன. ஒவ்வொரு சேனலிலும் சிறப்பான பல தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்தத் தொடர்கள் வாரம் முழுவதும் ஒளிபரப்பாவதால் அதிகமான ரசிகர்களை பெற்று வருகின்றன. ஒரு காலகட்டத்தில் பெண்கள் மட்டுமே இந்த தொடர்களை பார்த்து வந்தனர்.

அதிகமான டிஆர்பி பெறும் தொடர்கள்
ஆனால் தற்போது ஆண்களும் இந்தத் தொடர்களை அதிகமாக பார்க்கின்றனர். ஷிப்ட்களில் பணிபுரியும் ஆண்களும் மாலை நேரங்களில் வீட்டிற்கு வரும் ஆண்களும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் இந்தத் தொடர்களின் டிஆர்பி அதிகரித்து காணப்படுகின்றன. சன்டிவியின் கயல், ரோஜா, விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற தொடர்கள் சிறப்பான வரிசையில் இடம்பெற்றுள்ளன.

2வது சீசன்களை துவக்கிய தொடர்கள்
விஜய் டிவியில் அடுத்தடுத்து சிறப்பான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. சில சீரியல்கள் முதல் சீசனை முடித்து இரண்டாவது சீசன்களையும் ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட தொடர்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. ஒரு சீரியல் ரசிகர்களை கவராமல் டிஆர்பியிலும் சொதப்பினால் உடனடியாக அந்த சீரியலை பாவம் பார்க்காமல் முடித்து வைக்கிறது இந்த சேனல்.

சீரியல்களை நிறுத்த திட்டம்
அந்த வகையில் தற்போது, டிஆர்பியில் முன்னேற்றம் இல்லாத நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி, மௌனராகம் சீசன் 2 போன்ற தொடர்களை நிறுத்த விஜய் டிவி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தொடர்கள் விரைவில் நிறுத்தப்படுவது குறித்த இந்த தகவல் ரசிகர்களை வெகுவாக ஏமாற்றம் கொள்ள செய்துள்ளது.

சீரியல்களை நிறுத்த காரணம்
விஜய் டிவியின் முக்கியமான தொடர்களாக பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் காணப்படுகின்றன. இந்தத் தொடர்கள் சேனலில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்று வருகின்றன. ஆனால் மேலே குறிப்பிடப்பட்ட தொடர்கள் இந்த வரிசையில் இடம்பெற தவறியுள்ளதால் இந்த தொடர்களை நிறுத்தும் முடிவை சேனல் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.