நீயா நானா கோபிநாத் ஹீரோவாகிறார்... இது எல்லாத்துக்கும் மேல

சென்னை: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான கோபிநாத் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். பாரதி கணேஷ் இயக்கவிருக்கும் இது எல்லாத்துக்கும் மேல என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் கோபிநாத் ஆகவே நடித்திருக்கிறார். கோபிநாத் உடன் நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர்.

தமிழில் மிக முக்கியமான தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சித் தொடர். ஒரு கருத்தை எடுத்து அதை ஆதரிப்போரையும் அந்த கருத்தை எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு தொலைக்காட்சி தொடரே நீயா நானா.

Vijay TV Gopinath Acts in Ithu Ellathukkum Mela Film

இந்த தொடரின் நடுவராக இருந்து கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக நடத்தி வரும் கோபிநாத் மக்களிடையே பிரபலமானவர். வெறுமனே கோபிநாத் என்றால் இவர் யார் என்று தெரியாது. நீயா நானா கோபிநாத் என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர்.

இவர் நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் கோபிநாத் ஆகவே நடித்திருக்கிறார். இவர் தற்போது இது எல்லாத்துக்கும் மேல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கி வருகிறார் பாரதி கணேஷ். இவர் இதற்கு முன்பு, கண்ணுபட போகுதய்யா எனும் தமிழ் படத்தையும் யுத்தம், ஆமையகுடு என்ற தெலுங்கு படங்களையும் இயக்கி உள்ளார்.

இது எல்லாத்துக்கும் மேல படம், இந்த கால சூழ்நிலைகளில் பல பெற்றோர்கள் வேலை நெருக்கடி காரணத்தால், தங்களது பிள்ளைகளை கவனிப்பது குறைந்து வருகிறது. இதனால் பிள்ளைகள் தவறான பாதைக்கு சென்று விடுகின்றனர். இந்த சூழ்நிலையில், பிள்ளைகளை நல்லவர்களாகவும், நாணயம் மிக்கவர்களாகவும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாக உள்ளது.

இந்த படத்தில் கோபிநாத் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர். படபிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X