விஜய் டிவியின் குசும்புத்தனம்… அட விடுங்கப்பா முடியல… நொந்து நூடுல்ஸான விஜய் ரசிகர்கள்!
சென்னை : பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியான நிலையில், எதிர்பார்த்த அளவு படம் இல்லை என்று நெட்டிசன்ஸ்கள் படத்தை தாறுமாறாக கலாய்த்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி பீஸ்ட் படத்தை கலாய்க்கும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.
இந்த ப்ரோமோவில் ராமர் பீஸ்ட் பட விஜய்யை போல நகைச்சுவையாக நடித்துள்ளார். இணையத்தில் ரசிகர்கள் படத்தை கிண்டலடித்து வரும் நேரத்தில் வெளியாகி உள்ள இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி உள்ளது.

பீஸ்ட் காமெடி
விஜய் தொலைக்காட்சி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உடன்பிறப்பே என்ற காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், பீஸ்ட் திரைப்படத்தில் விஜய், சிவப்பு துணியை கத்தியால் கிழித்துக்கொண்டு வெளியே வருவது போல நகைச்சுவை நடிகர் ராமர் வெளியே வருகிறார். மேலும்,பொம்மை துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு உருண்டு, பிரண்டு படபடவென சுட அரங்கில் இருப்பவர்கள் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள்.

பயமா இருக்கா?
அது மட்டும் இல்லாமல் பீஸ்ட் படத்தில் விஜய், யோகிபாபுவை பார்த்து பயமா இருக்கா... இனிமே தான் பயங்கரமா இருக்கும் என்று சொல்வதை, ராமர் அப்படியே இமிடேட் செய்கிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக நாளை மாலை 4 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

டேய் விஜய் டிவி
பீஸ்ட் குறித்து ரசிகர்கள் பயங்கரமாக கலாய்த்து வரும் நேரத்தில், விஜய் தொலைக்காட்சி இப்படி ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த தளபதி ரசிகர்கள், ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகி இருக்கோம்.. டேய் விஜய் டிவி நீ குசும்புக்கார பயடா என கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்
என்னத்தான் சோஷியல் மீடியாவில் பீஸ்ட் திரைப்படம் குறித்து தாறுமாறான கருத்துக்கள் வந்தாலும், விஜய்யின் ரசிகர்கள் விமர்சனத்தை தள்ளி வைத்துவிட்டு, படத்தை திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். அரபிக்குத்து பாட்டுக்கும், ஜாலியோ ஜிம்கானா பாட்டுக்கும் குத்தாட்டம் போட்டு, விசில் பறக்க படத்தை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











