போட்டியாளர்கள் யாருன்னு தெரிஞ்சிக்கிற நேரம் வந்தாச்சு.. பிக்பாஸின் மிரட்டல் குரலில் அசத்தல் புரமோ!

சென்னை: போட்டியாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டதாக பிக்பாஸின் மிரட்டல் குரலில் புதிய புரமோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil Season 4 Promo | 4th October 2020 | Kamal Hassan

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளது.

இதற்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியானது.

உறுதியான தகவல்

உறுதியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக இதுவரை மூன்று புரமோக்கள் வெளியாகியுள்ளது. இருந்த போதும் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. போட்டியாளர்கள் குறித்து நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்களே ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

போட்டியாளர்கள் பெயர்கள்

போட்டியாளர்கள் பெயர்கள்

அந்த வகையில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உறுதியான பிரபலங்கள் என ஒரு பட்டியல் வைரலாகி வருகிறது. அதில் அனுமோகன், ஜித்தன் ரமேஷ், ரியோ ராஜ், கேப்ரில்லா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோரின் பெயர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டார் ஹோட்டலில்..

ஸ்டார் ஹோட்டலில்..

மேலும் நடிகைகள் சனம் ஷெட்டி, கிரண், ரேகா, விஜே அர்ச்சனா மற்றும் நடிகர் ஆரி, சூப்பர் சிங்கர் வின்னர் அஜித் மற்றும் நடிகை காயத்ரி ஆகியோர் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆடியோ புரமோ

ஆடியோ புரமோ

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டிவி புதிய புரமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆடியோவாக உள்ளது அந்த புரமோ. அதில் பிக்பாஸின் அந்த கணீர் குரலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள கமல்ஹாசனின் குரலும் இடம்பெற்றுள்ளது.

எப்படி இருக்கீங்க

எப்படி இருக்கீங்க

அந்த புரமோவில், இது பிக்பாஸ்.. எப்படி இருக்கீங்க.. இந்த பிக்பாஸ் சீசன் 4க்கான போட்டியாளர்கள் யார் என தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்தாச்சு.. வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிக்பாஸ் சீசன் நான்கோட கிராண்ட் ஓபனிங் நடக்கப்போகுது.. பார்க்க ரெடியா இருங்க.. என்றும் என்ன கமல் சார் என்று கேட்பதாகவும் உள்ளது.

காத்திருக்கிறோம்

காத்திருக்கிறோம்

அதன் தொடர்ச்சியாக, ம்.. என்று பேசத் தொடங்கும் கமல்ஹாசன், தப்புன்னா தட்டிக்கேட்பேன்.. நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என கூறியுள்ளார். இவ்வாறாக உள்ளது அந்த ஆடியோ புரமோ. இதனைக் கேட்ட நெட்டிசன்கள், பிக்பாஸின் குரலைக் கேட்டு தீயாய் இருக்கிறது என கூறியுள்ளனர்.

நல்ல டாஸ்க் கொடுங்கள்

நல்ல டாஸ்க் கொடுங்கள்

இன்னும் இந்த குரலைக் கேட்கதான் காத்திருக்கிறோம் என்று கூறி பிக்பாஸ் மீதுள்ள பிரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த முறையாவது மொக்கையாக இல்லாமல் நல்ல நல்ல டாஸ்க்குகளை கொடுங்கள் என கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X