twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்படிடா தோனுச்சு இந்த பொண்ண டார்ச்சர் பண்ண.. விஜய் டிவி வெளியிட்ட கடைசி வீடியோ.. கதறும் ரசிகர்கள்!

    |

    சென்னை: சித்ரா கடைசியாக பங்கேற்ற ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியின் ஒரு பகுதியை விஜய் டிவி ஷேர் செய்துள்ளது.

    பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவரான ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    நிக்கி கல்ராணி வித் பப்பிஸ்.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்! நிக்கி கல்ராணி வித் பப்பிஸ்.. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் போட்டோஷூட்!

    இருந்த போதும் சித்ராவின் மரணம் தொடர்பாக நாள் தோறும் ஒரு தகவல் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் சித்ராவின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    சித்ராவின் கடைசி நிகழ்ச்சி

    சித்ராவின் கடைசி நிகழ்ச்சி

    இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்வதற்கு முன்பு பங்கேற்ற வீடியோவை விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளது. அதாவது நடிகை சித்ரா தான் இறப்பதற்கு முன்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தூக்கிட்டு தற்கொலை

    தூக்கிட்டு தற்கொலை

    இரவு 2.30 மணிக்கு அந்த ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில் அதிகாலை 3 மணிக்கு கணவருடன் நசரத் பேட்டையில் உள்ள ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தார். கணவரின் சந்தேகத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈமோஜிகள் போல்..

    ஈமோஜிகள் போல்..

    இந்நிலையில் ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சியில் சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவினருடன் பங்கேற்றார். விஜய் டிவி ஷேர் செய்துள்ள அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் சித்ராவும் அவரது சீரியல் ஜோடியான குமரனும் நிற்க அவர்களுக்கு ஈமோஜிகளை ஒளிபரப்ப, அதேபோன்று பாவனை செய்ய வேண்டும்.

    உங்க டேலன்ட்..

    உங்க டேலன்ட்..

    இதில் ஒவ்வொரு ஈமோஜிக்கும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அதேபோல் முகத்தை வைத்து காட்டுகின்றனர். அப்ளாஸை பெறும் இந்த பர்ஃபாமன்ஸை தொடர்ந்து, சித்ராவிடன் உங்க டேலன்ட் என்ன என்று கேட்கிறார் தொகுப்பாளரான பிரியங்கா.

    லைட்டாய் டக்கராய்..

    லைட்டாய் டக்கராய்..

    அதற்கு மியாவு மியாவு என பூனையை போல் கத்தி அட்டகாசம் செய்கிறார் சித்ரா. அதனை பார்த்த பிரியங்கா பூனை மாதிரி கத்துவதுதான் உங்கள் டேலன்ட்டா என்று கேட்டு பூனை இப்போது சரக்கடிச்சுவிட்டு லைட்டாய் டக்கராய் விட்டது என்கிறார்.

    பூனைக்கு லவ் வந்தால்

    பூனைக்கு லவ் வந்தால்

    அதனைக் கேட்ட சித்ரா, சரக்கடித்த பூனைப்போல் அசால்ட்டாய் செய்கிறார். அதேபோல் பூனைக்கு லவ் வந்தால் எப்படி கத்தும் என்றும், பூனைக்கு கோபம் வந்தால் எப்படி கத்தும் என்றும் கேட்க அப்படியே கேட்டதற்கு ஏற்ப கொஞ்சமும் கூச்சமில்லாமல் செய்து காட்டுகிறார் சித்ரா.

    அப்ளாஸ் அள்ளியுள்ளார்..

    அப்ளாஸ் அள்ளியுள்ளார்..

    கடைசியாக பூனை அர்ஜென்ட்டாக செல்ல வேண்டிய நிலையில் கதவு சாத்தியிருந்தால் என்ன செய்யும் என பிரியங்கா கேட்க அதையும் அப்படியே செய்து காட்டி அப்ளாஸை அள்ளியுள்ளார் சித்ரா.

    எப்படிடா மனசு வந்துச்சு?

    எப்படிடா மனசு வந்துச்சு?

    இந்தக் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் சித்ராவின் திறமையை பார்த்து புகழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த பொண்ண டார்ச்சர் பண்ண எப்படிடா மனசு வந்துச்சு என்றும் வேதனையுடன் கேட்டு வருகின்றனர்.

    திரும்பி வா சித்து

    திரும்பி வா சித்து

    இன்னும் சில நெட்டிசன்கள் உள்ளே இவ்ளோ கஷ்டத்த வச்சுட்டு வெளியே ஃபன் இருந்திருக்காங்க என்றும் அவரை பற்றி நினைவு கூர்ந்துள்ளனர். இன்னும் சிலர் இப்படி சிரிச்சுட்டு திடீர்ன்னு அடுத்த நாளே போயிட்டியே சித்து.. உன்னை ரொம்ப மிஸ் பண்றோம். திரும்பி வா சித்து என்றும் கதறியுள்ளனர்.

    English summary
    Vijay TV has shared Chithra's last show. Chithra has participated in Vijay TV's Start Music show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X