இது என்னடா அட்மினுக்கு வந்த சோதனை.. பிக்பாஸ் குறித்து விஜய் டிவி ஷேர் செய்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷாட்!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விஜய் டிவி பகிர்ந்துள்ள வாட்ஸ் அப் ஸ்க்ரீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Recommended Video

Jayashree & Eshwar Entry | Unexpected Contestant • Kamal Hassan | Oneindia Tamil

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதுதொடர்பான பேச்சுதான் சமூக வலைதளங்களில் அதிகம் இடம் பெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான 2 புரமோக்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது புரமோ விரைவில் வெளியாகும் தகவல் வெளியாகியுள்ளது.

புரமோக்கள்

புரமோக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கினால் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் புரமோக்கள் வெளியாவது வழக்கம். நிகழ்ச்சி சுவாரசியமாக செல்லும் போது புரமோ எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்த்து காத்திருப்பார்கள் ரசிகர்கள்.

மொக்கை

மொக்கை

புரமோக்கள் நன்றாக இருந்தால் அதை கொண்டாடுவதும் மொக்கையாக இருந்தால் கழுவி ஊற்றுவதும் ரசிகர்களின் வாடிக்கை. இந்நிலையில் இப்போதே ரசிகர்களை அதற்கு தயார் படுத்தி வருகிறது. தினமும் பிக்பாஸ் தொடர்பாக ஏதாவது ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட்டி வருகிறது.

செம்மயா புரமோ

செம்மயா புரமோ

நேற்று இன்னும் கொஞ்சம் நாள் தான் அப்புறம் தினமும் இந்நேரம் செம்மயா ஒரு புரமோ வந்துடும் என்று டிவிட்டியது. அதனை பார்த்த ரசிகர்கள் புரமோ வரும்னு மட்டும் சொல்லுங்க செம்மயா இருக்குமா இல்லையா என்பதை நாங்கள் சொல்கிறோம் என மொக்கை செய்தனர்.

அட்மினுக்கு வந்த சோதனை

அட்மினுக்கு வந்த சோதனை

இந்நிலையில் இன்றும் விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் பிக்பாஸ் குறித்து டிவிட்டியுள்ளது. அதாவது அட்மினின் வாட்ஸ் அப் சாட்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதனை தனது டிவிட்டர் பக்கத்தில், அட்மினுக்கு வந்த சோதனை என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்துள்ளது.

அங்கதான் வேலை பாக்குறீயா?

அங்கதான் வேலை பாக்குறீயா?

அந்த உரையாடலில் பிக்பாஸ் கன்டெஸ்டன்ட்ஸ் யாரு என்று ஒருவர் கேட்க, விஜய் டிவி அட்மின், சத்தியமா தெரியலடா என்கிறார். அதற்கு மற்றொரு கோபமாக நீ நெஜமாவே விஜய் டிவில தான் வேலை பாக்குறீயா? என்று கேட்டுள்ளார். இந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஷேர் செய்துள்ளனர்.

பர்ஃபாம் பண்றாங்களாம்

பர்ஃபாம் பண்றாங்களாம்

இந்த ஸ்க்ரீன் ஷாட் இமேஜ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், தெரியாத மாதிரியே நடிக்கிறது.. பர்ஃபார்ம் பண்றாங்களாம்.. என்ன பிக்பாஸ்க்கு புரமோஷனா என வாய்க்கு வந்தப்படி பதிலை சொல்லி கலாய்த்துள்ளனர்.

பாக்குறதே சோதனை தானே

பாக்குறதே சோதனை தானே

இன்னும் சில நெட்டிசன்கள் வேஸ்ட் அட்மின்யா நீ.. போ.. போய் பாக்கியலக்ஷ்மிக்கு புரமோ போடு.. அதுக்குதான் நீ சரிப்பட்டு வருவ என்றும் விஜய் டிவி பாக்குறதே எங்களுக்கு ஒரு சோதனை தானே என்றும் பதில் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X