மீண்டும் விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் சிம்பு? பிக் பாஸ் தமிழ் 5ஐ தொகுத்து வழங்க தீவிர பேச்சுவார்த்தை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் விஜய் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Recommended Video
உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 4 வரை தொகுத்து வழங்கி உள்ளார்.
அரசியல் களத்தில் தற்போது அவர் பிசியாக உள்ள நிலையில், அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சரியான ஆளை தேடி வருகிறது விஜய் டிவி.

பிக் பாஸ் தமிழ்
வெளிநாடுகளில் பிரபலமான இந்த ஷோவை இந்தியாவில் நடிகர் சல்மான் கானை ஹோஸ்ட்டாக வைத்து தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 14 சீசன்களை வெற்றிகரமாக இந்தி பிக் பாஸ் கடந்து விட்டது. தமிழில் நடிகர் கமல்ஹாசனை தொகுப்பாளராக நியமித்து கடந்த 4 சீசன்களையும் வெற்றிகரமாக கடத்தி உள்ளனர்.

கமலுக்கு பதில் ஏன்
கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் போது வேறு ஒரு தொகுப்பாளரை விஜய் டிவி தேட வேண்டிய நிலைக்கு வர காரணம் அரசியல் தான். சினிமாவில் கலக்கிய கமல், அரசியலிலும் களமிறங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற முடிவை எடுத்த நிலையில், அவருக்கு பதிலாக இன்னொரு தொகுப்பாளரை அடுத்த சீசனுக்கு விஜய் டிவி நியமிக்க ஆலோசித்து வருகிறது.

சிம்புவிடம் பேச்சுவார்த்தை
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் விஜய் டிவி தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிக் பாஸ் அனாலிஸ்ட் இமாத் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். சினிமாவுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு வீக்கெண்ட் ஷோக்களை நடத்த சம்மதித்தால், நிச்சயம் அது வேற லெவல் டிஆர்பியை கொடுக்கும் என்பது உறுதி.

காரசாரமாக இருக்கும்
மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சி போல கடந்த சில தமிழ் பிக் பாஸ் இல்லை என்கிற குற்றச்சாட்டும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இளைஞர்களுக்கான நிகழ்ச்சியாக உருவான பிக் பாஸை கமலின் சாஃப்ட் ஹேண்ட்லிங் மூலம் குடும்பங்கள் பார்க்கும் நிகழ்ச்சியாக மாறி விட்டது. அதே சமயத்தில் சர்ச்சைகளின் கூடாரமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் வெகுவாக குறைந்து விட்டது. இதுவே சிம்பு தொகுத்து வழங்கினால், நிச்சயம் காரசாரத்திற்கு பஞ்சமே இருக்காது என்றும் கூறுகின்றனர்.

ஜோடி நம்பர் ஒன் சர்ச்சை
கடந்த 2007ம் ஆண்டு ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக சிம்பு கலந்து கொண்ட போது, நடிகரும் போட்டியாளருமான பப்லுவுக்கும் சிம்புவுக்கும் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் காரணமாக, அதிரடியாக சிம்பு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பரபரப்பை கிளப்பினார். பின்னர், விஜய் டிவி நிர்வாகம் அவரை சமாதனப்படுத்தி அழைத்து வர, நடிகர் பப்லு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது பரபரப்பை கிளப்பியது.

பக்கா ஸ்க்ரிப்டட்
ஆனால், அது ஒரு பக்கா ஸ்க்ரிப்டட் ஆன விஷயம் என்றும் பின்னர் பப்லு சில பேட்டிகளில் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க சம்மதம் தெரிவிப்பாரா? என்கிற கேள்வியும் உள்ளது. அப்படி அவர் சம்மதம் தெரிவித்தால், நிச்சயம் பிக் பாஸ் சீசன் 5 பிக் பாஸ் ரசிகர்களுக்கு சரியான தீனியாக அமையும்.

இவங்க வந்தாலும்
மேலும், சிம்புவுக்கு பதிலாக நடிகர் அர்ஜுன், அரவிந்த் சாமி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். ஆனால், கமல்ஹாசன் தான் பிக் பாஸ் தமிழ் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











