என்னடா இது GOATக்கு வந்த சோதனை?.. அடிமாட்டு விலைக்கு கேட்ட சேனல்.. இவ்வளவுதான் தொகையா?
சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன்முறையாக விஜய்யை இயக்குகிறார் வெங்கட் பிரபு. அவர் எப்போது தனது மேக்கிங்கையும், திரைக்கதையையும் வித்தியாசமாகவும், ஜாலியாகவும் கொடுப்பவர் என்பதால் நிச்சயம் அவரது ஸ்டைல் விஜய்க்கு க்ளிக் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் விமர்சன ரீதியாக பின்னடைவையே சந்தித்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக ஒழுங்காக இல்லை. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

GOAT: இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். 90களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த பிரசாந்த் இந்தப் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். நிச்சயம் அவருக்கு இந்தப் படம் மாஸ் ரீ என்ட்ரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் படம் பற்றிய ஆவலை தூண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும்படி வெங்கட் பிரபு பிளான் செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி GOAT படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கண்டிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு GOAT படம் திருவிழா போல் கொண்டாடப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ஷூட்டிங் அப்டேட்: படத்தின் ஷூட்டிங் கடைசியாக கேரளாவில் நடைபெற்றது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக விஜய், பிரசாந்த் உள்ளிட்டோர் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து பிறகு மீண்டும் ரஷ்யா திரும்பினர். கண்டிப்பாக இதுதான் இறுதிக்கட்ட ஷூட்டிங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்தில் சிஜி பணிகள் அதிகம் இருப்பதாக வெங்கட் பிரபு சொல்லியிருக்கிறார். பட ரிலீஸுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணியில் கவனம் செலுத்தி விரைவில் வெங்கட் பிரபு முழு பணிகளையும் முடிக்கவிருக்கிறார். இதற்கிடையே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த 14ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இவ்வளவுதான் விலையா?: GOAT படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் சேட்டிலைட் உரிமை குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது முதலில் சன் டிவி GOAT படத்தை வாங்குவதாக முடிவு செய்திருந்ததாம். ஆனால் சில காரணங்களால் அந்த முடிவிலிருந்து சன் டிவி பின்வாங்கிவிட்டதாம். பிறகு ஜீ நெட்வொர்க்கும் கைவிரிக்க கடைசியாக விஜய் டிவி வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியதாம். ஆனால் 12 கோடி ரூபாய் மட்டும்தான் கொடுப்போம் என்பதில் விஜய் டிவி தரப்பு கறாராக இருப்பதாகவும்; தொகையை ஏற்றுவதற்கு GOAT தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











