பெரியம்மா கொடுமைப்படுத்தினாங்க.. அனாதை வாழ்க்கையை வாழ்ந்தோம்..கண்கலங்கிய நாஞ்சில் விஜயன்!

சென்னை : அம்மா இல்லை, அப்பா அல்லை அனாதை வாழ்க்கையை வாழ்ந்தோம் என நாஞ்சில் விஜயன் பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசி உள்ளார்.

விஜய் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நாஞ்சில் விஜயன் சிரிச்சா போச்சு, அது இது எது? உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வித்தியாசமான தோற்றங்களில் களமிறங்கி பலரையும் சிரிக்க வைத்தவர்.

இவருக்கு பெண் வேடங்கள் பக்காவாக பொருந்தி இருக்கும் என்பதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

Vijay tv kalakka povathu yaaru Nanjil Vijayan Emotional Interview

நாஞ்சில் விஜயன் கண்ணீர் பேட்டி : நாஞ்சில் விஜயன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் வாழ்க்கையில் தான் அனுபவித்து வந்த துயரங்களை கண்ணீர் மல்க கூறியுள்ளார். என் அம்மா தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள். அப்பா ஒரு பரோட்டா கடையில் வேலை செய்து கொண்டுவந்தார். அப்போது அங்கு நடந்த கொலை வழக்கில் அப்பா சிறைக்கு போய்விட்டார்.

அனாதையாக இருந்தோம் :

யாருமே இல்லாமல் ஆனாதையாக இருந்தோம் அப்போது தான் என் அம்மாவின் அம்மா என் பாட்டி என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள், இரண்டு வருடம் அம்மா இல்லாத குறையே எங்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், பாட்டியும் இறந்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியவில்லை அப்போது தான் என், பெரியம்மா வீட்டிற்கு நானும் என் தங்கை, தம்பியும் சென்றோம்.

Vijay tv kalakka povathu yaaru Nanjil Vijayan Emotional Interview

பெரியம்மா கொடுமை : என் பெரியப்பா இறந்துவிட்டார், பெரியம்மாவுக்கு இரண்டு பசங்க என்பதால், எங்களையும் அவர்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால், என்னை வேலைக்கு போக சொன்னார்கள். அந்த வயதில் பெரியம்மாவின் நிலைமை புரியாததால் பெரியம்மா என்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்று நினைத்து வீட்டைவிட்டு ஓடி கோயம்புத்தூரில் துணிக்கு சாயம் போடும் கம்பெனியில் வேலை பார்த்தேன்.

பாரில் வேலை பார்த்தேன் : அதன் பின் நாகர்கோவில் சென்று ஒரு பாரில் வேலை பார்த்துக்கொண்டே படித்துக்கொண்டு இருந்தார். இப்போது, விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 4ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எபிசோடிலேயே எலிமினேஷன் ஆகி வெளியேறிவிட்டேன். இருந்தாலும், சினிமாவில் எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால், வாய்ப்பு தேடி அலைந்தேன்.

Vijay tv kalakka povathu yaaru Nanjil Vijayan Emotional Interview

மெரினா பீச்சில் தூங்கினேன் : சென்னையில் தங்கி சினிமா வாய்ப்பு தேட காசு இல்லாததால், மெரினா பீச்சில் கிட்டத்தட் 25 நாட்களுக்கு மேல் இரவு நேரத்தில் படுத்து இருந்திருக்கிறேன். அதன் பின் நண்பர்களின் உதவியோடு சென்னையில் வாடகை வீட்டில் குடியேறினேன். அதன்பின் தான், விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது என்று நாஞ்சில் விஜயன் கண்ணீர் மல்க கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X