மாதம்பட்டியின் மானத்தையே வாங்கிவிட்ட குரேஷி.. லவ் யூ மிஸ் யூ எல்லாம் அப்படியே சொல்றாரு.. தரமான வீடியோ!

சென்னை: நடிகரும் புகழ்பெற்ற சமையல் செஃப்வுமான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து கடந்த சில வாரங்களாகவே பரபரப்பான விஷயங்கள் ஓடிக் கொண்டு உள்ளது. குறிப்பாக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது, அதன் பின்னர் அவரது முதல் மனைவியுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்படி இருக்கும்போது கடந்த வாரத்தில் அவரது இரண்டாவது மனைவியும் ஆடை வடிவமைப்பு கலைஞரான ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என்றும், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும். அவர் என்னுடன் தொடர்பை முற்றிலும் தவிர்த்து விட்டார் என்றும் தனக்கும் தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நியாயம் வேண்டும் என்றும் புகார் அளித்திருந்தார்.

Vijay TV KPY Mohamed Kuraishi Trolls Madhampatty Rangaraj On Instagram Fans Getting Shock Onam 2025
Photo Credit:

இது மட்டும் இல்லாமல் அவரது நிகழ்ச்சி தொடர்பாக படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்குச் சென்று அவரை சந்தித்து முறையிடச் சென்ற போது அவர் தன்னைத் தாக்கியதாவும் கூறினார். மேலும் கருவில் இருக்கும் குழந்தையை முதலில் கலைக்கச் சொன்னார் என்றும் தெரிவித்தார். இவரது இந்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலையை எழுப்பியது. இது மட்டும் இல்லாமல், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடம் எப்படி எல்லாம் ஆசை வார்த்தைகள் பேசி தன்னை ஏமாற்றினார் என்று சாம்பிள் வீடியோ ஒன்றை வெளியிட்டு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.

சர்ச்சை வீடியோ: ஜாய் கிரிசில்டா பகிர்ந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கும்போது ரசிகர்கள் பலருக்கும் அந்த வீடியோ ஷாக் கொடுக்க, நகைச்சுவை நடிகர் குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் போல பேசி வாழ்த்து சொல்லி உள்ளார். அதுவும் அந்த வீடியோவுக்கு, " உங்கள் மனைவிக்கு மாதம்பட்டி ரங்கராஜ் அண்ணன் ஸ்டையில் யுனிக்காக ஒரு வாழ்த்து எப்படி சொல்வது" என்று கேப்ஷன் இட்டுள்ளார். இந்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

Vijay TV KPY Mohamed Kuraishi Trolls Madhampatty Rangaraj On Instagram Fans Getting Shock Onam 2025
Photo Credit:

மாதம்பட்டி ரியாக்‌ஷன்: இந்த வீடியோவுக்கு நடிகை திவ்யா துரைசாமி ரொம்பவும் தைரியம் தான் என கமெண்ட் போட்டுள்ளார். வீடியோவைப் பார்த்த பலரும் ரங்கராஜ்க்கும் இவருக்கும் முட்டிக்கொள்ள போகிறது என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ், குரேஷியின் இந்த வீடியோவுக்கு டேய் ரொமான்ஸ் பத்தலடா இரண்டு வாரம் எங்கிட்ட டிரைனிங் வாடா என்று செம ஜாலியாக கமெண்ட் போட்டுள்ளார். இவரது கமெண்ட்டை பார்த்த பலரும் ஷாக் ஆகி உள்ளார்கள்.

ரசிகர்கள் ஷாக்: ரங்கராஜின் இந்த கமெண்ட் டைப் பார்த்த இணையவாசிகள் சிலரோ, நாங்களும் வருகிறோம் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள், கட்டணம் எவ்வளவு, இதற்காக நீங்கள் ஏன் தனி பல்கலைக்கழகம் தொடங்க கூடாது? என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ஆமாம் சார், குரோஷிக்கு உங்கள மாதிரி ரொமான்ஸ் வரல, ஆனால் நீங்க வேற லெவல் ரொமான்ஸா பேசி இருந்தீங்க" என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் பலர் மாதம்பட்டியின் கமெண்ட்க்கு கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X