தீராத நோயால் இடது காலை இழந்த லொள்ளு சபா நடிகர்... கண்ணீர் விட்டு அழுத மகள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹிட் ஆன தமிழ் படங்களை வைத்து எடுக்கப்படும் காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்கும் அளவிற்கு மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளன. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த நிகழ்ச்சியில் இதுவும் ஒன்று. இந்த ஷோவில் நடித்த பலரும் இன்று பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர். எடுத்துக்காட்டாக நடிகர் சந்தானம், மனோகர், சுவாமி நாதன் உள்ளிட்ட பலரும் ரசிகர்களுக்கு பிடித்த காமெடியன்களாக வலம் வருகின்றனர்.
லொள்ளு சபா தொடரில் சந்தானம், மதுமிதா, சுவாமி நாதன், ஜீவன், மாறன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்தனர். இவர்களுடன் சிரிக்கோ உதயாவும் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலம் ஆனார். இவர், பல படங்களில் குணச்சித்திர காமெடியனாகவும் நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் சந்தானத்தின் பல படங்களுக்கு காமெடி வசனங்களை எழுதியுள்ளார். சந்தானத்துடன் சேர்ந்து இவர் நடித்த காட்சிகள் சிரிப்பலையை ஏற்படுத்தின.

யார் இந்த சிரிக்கோ உதயா?: நடிகர் சந்திரபாபுவின் மகனான சிரிக்கோ உதயா சிறந்த வயலின் கலைஞரும் கூட. கடந்த 35 வருடங்களாக சினிமா துறையிலும், இசை துறையிலும் பணியாற்றி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சிறந்த மிமிக்ரி கலைஞர் என பன்முகத்திறமை கொண்டவராக திகழ்கிறார்.
சந்தானம் நடித்த பல திரைப்படங்களுக்கு உடனிருந்து 15 வருடங்களாக காமெடி ஸ்கிரிப்ட்டில் பணியாற்றி உள்ளார். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெறும் காமெடி வசனங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதில், "யாரு சார் உங்க ரிலையன்ஸ்சா" "தானா வந்த தமன்னாவை தலைல தட்டி அனுப்பிட்டானே" "ராணுவத்தில் அழிஞ்சவனை காட்டிலும் ஆணவத்தில் அழிஞ்சவன் தான் அதிகம்" போன்ற பல பிரபலமான டயலாக்குகள் இவரின் கைவண்ணத்தில் உருவானது.
சக்கரை நோய் பாதிப்பு: பலரையும் சிரித்து ரசிக்க வைத்த சிரிக்கோ உதயா கடந்த சில நாட்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு சர்க்கரை வியாதியால் வலது காலை எடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர் கடைசியாக கனாக்காணும் காலங்கள் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார்.

காலை இழந்த சிரிக்கோ உதயா: இவரது உடல் நிலை குறித்து தெரிவித்த அவரது மூத்த மகள், "அப்பாவிற்கு கடந்த 2 மாதங்களாகவே உடல்நிலை மோசமாக இருந்தது. சர்க்கரை நோய் அதிகரித்ததால் அவரால் சீரான நிலையில் இருக்க முடியவில்லை. காலில் ரத்த ஓட்டம் சரியாக இல்லாததால், சர்க்கரை நோயினாலும் அப்பாவின் காலை சர்ஜரி செய்து இடது கால் முட்டிக்கு கீழ் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்பா இப்போ நல்லா இருக்காங்க, சீக்கிரம் வீடு திரும்பனும்னு எல்லோரும் வேண்டிக்க கேட்டு கொள்கிறேன்.
கண்ணீர் விட்டு அழுத மகள்: அப்பாவுக்கு 3 பசங்க தான். நாங்க தான் அவரை கவனித்துக்கொள்கிறோம். இதுவரை சினிமா துறையில் உள்ளவர்களிடம் அப்பாவின் நிலை குறித்து தெரிவிக்கவில்லை. உதவி கேட்டு தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். அவர் சீக்கிரமே பூரண குணமடைய வேண்டும் என அவர் கண்ணீருடன் தெரிவித்தார். மக்களை சிரிக்க வைத்த கலைஞரின் நிலை குறித்து அறிந்த நெட்டிசன்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications