Don't Miss!
- Finance
கிஷோர் பியானி ராஜினாமா.. பியூச்சர் ரீடைல் திவால்..!!!
- Sports
கேஎல் ராகுல் திருமணம் - பரிசுகளை அள்ளிக் கொட்டிய தோனி, கோலி.. விலையை கேட்டா "ஆடி" போய்டுவீங்க
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- News
"ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம்" நன்றி கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்ய இதுதான் காரணம்..மனம் திறந்து பேசிய மதுரை முத்து!
சென்னை : கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறித்து மதுரை முத்து மனம் திறந்து பேசி உள்ளார்.
மதுரையில் பிறந்த முத்து சிறு வயதில் இருந்தே பேச்சின் மீது ஆர்வம் இருந்ததால், பல மேடை நிகழ்ச்சியில் பேசி உள்ளார். சிரிக்க சிரிக்க இவர் பேசும் பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி செய்து அசத்தி பிரபலமானார்.
இதுக்குத்தான் பிக் பாஸ் வீட்டை விட்டு போனாரா.. சன்னி லியோனுக்கே பால்கோவா ஊட்டிவிட்ட ஜிபி முத்து!

மதுரை முத்து
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியால் பிரபலமான முத்து, சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு, சன்டே கலாட்டா நிகழ்ச்சியில், தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் தனது பெயரை பதியவைத்தார். சன் டிவியில் இருந்த முத்து மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்து பல காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

கார் விபத்தில் உயிரிழந்தார்
மதுரை முத்துவின் மனைவி லேகா 2016ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். லேகா மதுரையில் இருந்து பிள்ளையார்பட்டி செல்வதற்காக டிரைவர் கண்ணனுடன் சென்றார். கார், திருப்பத்தூர் கோட்டையிருப்பு பகுதி அருகே வந்த போது காரின் டயர் வெடித்து, கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தில் மோதியதில் லேகா உயிரிழந்தார், டிரைவர் கண்ணன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்.

இரண்டாவது திருமணம்
மனைவி இழந்த சில மாதத்திற்குள்ளே மனைவியின் தோழியான பல் மருத்தவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனைவி இழந்து சில மாதத்திலேயே மதுரை முத்து திருமணம் செய்து கொண்டதால், பலரும் அவரை விமர்சனம் செய்தனர். ஆனால், தனக்கு வயதான பெற்றோர் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அவர்களுக்காகத்தான் திருமணம் செய்து கொண்டேன் என்று விளக்கம் கொடுத்தார்.

ஏற்கனவே திருமணமாகிவிட்டது
மதுரை முத்து அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், தன் முதல் மனைவி லேகாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்ததாக கூறியுள்ளார். லேகாவின் கணவர் அவரை விட்டு சென்றதால், அவர் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அப்போது நான், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினேன்.

கண்கலங்கிய மதுரை முத்து
அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார். ஆனால், இந்த திருமணத்திற்கு என்னுடைய வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை. பலரின் எதிர்ப்பை மீறித்தான் லேகாவை திருமணம் செய்து கொண்டேன். ஆசை ஆசையாக வாழ்க்கையை தொடங்கினோம். ஆனால், அது பாதியில் முடிந்துவிட்டது என தனது முதல் மனைவி லேகா குறித்து மதுரை முத்து கண்கலங்கி பேசினார்.