பூவையாரை தொடர்ந்து சொகுசு கார் வாங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை.. சந்தோஷத்தில் மெளனராகம் சத்யா!
சென்னை: விஜய் டிவி பிரபலங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வரிசையாக கார்களை வாங்கி அடுக்கி வருகின்றனர்.
சமீபத்தில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பூவையார் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருந்தார்.
இந்நிலையில், மெளனராகம் 2 சீரியல் நடிகை ரவீனா தாஹாவுக்கு பரிசாக சொகுசு கார் ஒன்று கிடைத்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கார் வாங்கும் விஜய் டிவி பிரபலங்கள்
விஜய் டிவியில் சீரியலில் நடித்தாலும், தொகுப்பாளராக இருந்தாலும், பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட ரியாலிட்டி ஷோவுக்கு சென்றாலும் பிரபலம் ஆகிவிடலாம். அதை விட முக்கியமாக வெகு விரைவில் சொகுசு கார் வாங்கும் அளவுக்கு சம்பாதிக்க முடியும் என்பதை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் கார்களாக வாங்கி குவிக்கும் போட்டோக்கள் மூலம் தெரிய வருகிறது. ஜாக்குலின், புகழ், கேப்ரியல்லா என ஏகப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் புதிய கார் வாங்கி உள்ளனர்.

பூவையாரின் புது கார்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பாடகராக கலந்து கொண்ட பூவையார் நடிகர் விஜய்யின் பிகில், மாஸ்டர் படங்களில் நடித்த நிலையில், சில தினங்களுக்கு முன்பாக புதிதாக கார் ஒன்றை தனது கடின உழைப்பின் காரணமாக இளம் வயதிலேயே வாங்கி விட்டார். காருக்கான டிரைவரை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றும் மக்களால் தான் இது சாத்தியம் ஆனது என்றும் கூறியுள்ளார்.

மெளன ராகம் சீரியல் நடிகை
இந்நிலையில், அந்த வரிசையில் விஜய் டிவியின் மெளனராகம் 2 சீரியலில் சத்யாவாக நடித்து வரும் நடிகை ரவீனா தாஹாவும் புதிதாக ஒரு சொகுசு காரை பரிசாக பெற்றுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு கிஃப்ட்டாக கிடைத்த அந்த சொகுசு காருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார்.

அம்மா கொடுத்த பரிசு
ரவீனா தாஹாவுக்கு அவரது அம்மா கொடுத்த பிறந்தநாள் பரிசுதான் அந்த மோரிஸ் காரேஜ் சொகுசு கார். கருப்பு நிறத்தில் கம்பீரமாக நிற்கும் அந்த காரை அம்மாவும் மகளும் ஒரே மாதிரியான உடையை அணிந்து கொண்டு கார் நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

நன்றி சொன்ன சத்யா
தனது அம்மா இல்லையென்றால் தான் இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்க மாட்டேன் என்றும் தனக்கு எப்போதுமே துணையாக அம்மா இருந்து வருகிறார் என்றும் இத்தனை விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கியதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என பதிவிட்டுள்ளார்.

கார் விலை எவ்வளவு
சொகுசு காரான மோரிஸ் காரேஜின் விலை 25 லட்சத்துக்கும் மேல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யாவாக நடித்து மெளனராகம் 2 ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ள ரவீனா தாஹாவுக்கு அவரது அம்மா பிறந்தநாள் பரிசாக கடந்த அக்டோபர் 10ம் தேதி கார் ஒன்றை வழங்கிய நிலையில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











