Vijay - Trisha: விஜய் த்ரிஷாவை திருமணம் செய்து கொண்டால் மனதார வாழ்த்துவோம்.. விஜய் டிவி பிரபலம்

சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஜோடியாக திருமணத்திற்கு சென்றது பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. பலரும் இது குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். விஜய்க்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் தான் அதிகம் வந்து கொண்டு இருக்கையில், விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நடிகர் விஜய், த்ரிஷாவுடன் திருமணத்திற்கு சென்றுவிட்டார். அதனால் இப்போது என்ன பிரச்னை. கண்ணா பின்னாவென அட்வைஸ் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். அண்ணா உங்களுக்கு எதிரி வேறு யாருமே இல்லை அண்ணா, நீங்கள் தான் அண்ணா. அண்ணா உங்களை எவ்வளவு நம்பினோம், நீங்க போய் இப்படி பண்ணீட்டீங்களே.

விஜய்யின் அரசியல் கருத்தில் விமர்சியுங்கள் அதற்கு உங்களுக்கு முழு உரிமை உள்ளது. அது இந்த சமுதாயத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிக்க யாருக்கும் உரிமையும் கிடையாது, தகுதியும் கிடையாது. அடுத்தவர்களை குறை சொல்லும் போது மீதி மூன்று விரல்களும் உங்களைத்தான் காட்டும், அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Vijay tv Nanjil Vijayan Defends Vijay Over Trisha Wedding Appearance Says Don t Judge His Personal Life

நல்ல தோழமை: தனிப்பட்ட முறையில் விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு இருக்கிறார், பிடித்திருந்தால் சேர்ந்து வாழப் போகிறார்கள், இல்லை என்றால் விவாகரத்து பெறப் போகிறார்கள். அதை நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். நடிகை த்ரிஷாவுடன் ஒரு திருமணத்தில் கலந்து கொள்கிறார் என்றால், ஒரு தோழியாக, நல்ல நண்பனாக கலந்து கொண்டிருக்கலாமே. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் நம்மில் எத்தனை பேர், இதேபோல் தோழியுடன் திருமணத்திற்கும் நிகழ்ச்சிக்கும் செல்வோம். அதை யாராவது தவறாக பேசினால் எப்படி இருக்கும்.

திருமணம் செய்து கொண்டால்: நடிகர் விஜய் சினிமாவில் உள்ளார், நடிகை த்ரிஷா சினிமாவில் உள்ளார். எதேர்ச்சியாக நீங்கள் திருமணத்திற்கு செல்கிறீர்களா என்று கேட்டு இருக்கலாம். நானும் வருகிறேன் என்று சென்றிருக்கலாம். இதற்கு எல்லாம் அவர் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தால், அதை விட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை என்பது தளபது விஜய்க்குத் தெரியும். நீங்கள் சொல்லும் இந்த விமர்சனம் என்பது, அவரது குடும்பத்தில் இருப்பவர்களை எந்த அளவுக்கு பாதிப்புக்கு ஆளாக்கும் என்பதை கொஞ்சமாவது மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை த்ரிஷாவை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் அதை அவர் சொல்லட்டும், அதன் பிறகு நாம் தெரிந்து கொள்வோம் மனதார வாழ்த்துவோம்" என்று பேசி வீடியோ பகிர்ந்துள்ளார். இவரது இந்த வீடியோ விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X