Nepoleon Son : நெப்போலியன் குடும்பத்தை சந்தித்த கோபிநாத்.. முக்கியமான விஷயம் குறித்து பேச்சு!

அமெரிக்கா: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் துரைசாமி, தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பத்தினரை, கோபிநாத் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் ஒரு முக்கியமான விஷயம் குறித்து பேசி உள்ளார்கள். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் நெப்போலியன். அதன் பின்னர் திமுகவில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம் அவரை தீவிர அரசியல்வாதியாகவும் மாற்றியது. இதனால் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தனது பயணத்தை தொடர்ந்தார். தனது இரண்டு மகன்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் வந்ததன் காரணமாக சினிமா, அரசியல் என அனைத்தையும் விட்டுவிட்டு சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அன்பைப் பெற்றவர்களில் இவரும் ஒருவர்.

Vijay tv Neeaya Naana Gobinath Meets Nepoleon Family At America Video
Photo Credit:

தொடக்கத்தில் மகனின் சிகிச்சைக்காக தான் சென்றாலும், ஒரு கட்டத்தில் அங்கேயே குடிபெயர்ந்து விட முடிவெடுத்து தங்கிக் கொண்டு உள்ளார்கள். அமெரிக்காவில் அவர் ஐ.டி. கம்பெனி மற்றும் மிகப்பெரிய விவசாயப் பண்ணை வைத்துள்ளார். இதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது குடும்பத்தை பேணி வருகிறார். கடந்த ஆண்டு அவரது மூத்த மகன் தனுஷ்க்கும் அக்‌ஷயா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக திருமணம் ஜப்பானில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக மட்டும், இந்திய மதிப்பில் சுமார் 100 கோடிகள் வரை செலவு செய்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

நெப்போலியன் வீட்டில் கோபிநாத்: இப்படி இருக்கையில் அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள், நெப்போலியன் வீட்டிற்குச் சென்று அவர்களை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில், இம்முறை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் நெப்போலியன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்தார். இது தொடர்பாக நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " Vijay TV புகழ் கோபிநாத் வருகை. உலகெங்கும் வாழும் அன்பு நண்பர்களே, நமது தமிழ்ச் சொந்தங்களே வணக்கம். கடந்த Oct 25ஆம் தேதி நாஷ்வில்லே-வில் அன்பு நண்பர்கள், ராஜ்குமார் & மகேஷ் அவர்களது கிளியர் ஸ்கை நிறுவனம் ஏற்பாடு செய்த அமெரிக்க வாழ்க்கை சுகமா, சுமையா..? என்ற தலைப்பில் , கோபிநாத்துடன் ஒரு விவாத மேடை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அமெரிக்காவில் இது போன்ற நிகழ்ச்சிக்காக பல்வேறு நகரங்களுக்கு 2 வாரமாக பயணம் செய்துவிட்டு , இந்த நிகழ்வுக்காக நாங்கள் வசிக்கும் நாஷ்வில்லே-க்கு வந்தபோது, எங்கள் வீட்டிற்கு அவர் வருகை தந்தது எங்கள் குடும்பத்திற்கு மகிழ்வாகவும், மனநிறைவாகவும் இருந்தது. மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.

Vijay tv Neeya Naana Gobinath Meets Nepoleon Family At America Video
Photo Credit:

முக்கிய பேச்சு: இந்த சந்திப்பின்போது நெப்போலியன் தனது மகன், சினிமாவுக்கான கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார் என்றும், கிட்டத்தட்ட முடித்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். நொப்போலியன் இவ்வாறு கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள், சினிமாவுக்கான கதை எழுதுவது, மூத்த மகன் தனுஷா இல்லை இளைய மகன் குணாலா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X