அட... அறந்தாங்கி நிஷா... வசந்தபாலன் படத்துலயா… சூப்பர் தான் போங்க!
சென்னை : வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகர் பாவா லக்ஷமன் இருவரும் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தினரும் ஒரு அப்டேட் வெளியாகி வருகிறது.
அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது.

முன்னணி இயக்குனர்
இயக்குனர் வசந்த பாலன், ஆல்பம் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அடுத்ததாக வெயில் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 2006ம் ஆண்டு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. இதையடுத்து, அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் போன்ற வெற்றித்திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார்.

ஜெயில்
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜெயில். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள காத்தோடு காத்தாக பாடல் வெளியாகி அனைவருக்கும் பிடித்த பாடலாக மாறியுள்ளது.

துஷாரா ஹீரோயின்
ஜெயில் திரைப்படத்தை அடுத்து, அர்ஜுன் தாஸ் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தற்போது சுறுசுறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக நடித்து, பலரது பாராட்டையும் பெற்ற துஷாரா நடித்து வருகிறார். தற்போது இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் அர்ஜுன் சிதம்பரம் நடித்து வருகிறார்.

அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்
வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்கள் நால்வருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார். அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

வனிதா விஜயகுமார்
இந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தினரும் ஒரு அப்டேட் வெளியாகி வருகிறது. நேற்று, இப்படத்தில் வனிதா விஜயகுமார் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. வைரல் ஸ்டாராகிப்போன வனிதா அனல்காற்று, 2 கே அழகானது காதல், அந்தகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், பிக்கப் ட்ராப் என ஏராளமான திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா
இந்நிலையில் படத்தில் தற்போது அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகர் பாவா லக்ஷமன் இருவரும் இணைந்துள்ளதாகப் படக்குழுவினவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விஜய் டிவி கலக்கப்போது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா. இவர் தமிழில் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஒருசில காட்சியில் நடித்திருப்பார். மேலும் மாரி 2 திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடித்திருப்பார்.

பாவா லக்ஷ்மன்
அதேபோல காமெடி நடிகரான பாவா லக்ஷ்மனும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இவர்கள் இருவர் தற்போது வசந்த பாலன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











