Exclusive:பைனல்ஸில் கணவர் வீடியோ.. விஜய்டிவி நினைத்தது ஒன்று.. நடந்தது வேறு.. மனம் திறக்கும் மதுமிதா
Recommended Video
சென்னை: பிக் பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சியில் தனது கணவரின் வீடியோ காட்டப்பட்டது தொடர்பாக நடிகை மதுமிதா பேசியுள்ளார்.
மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கூட அது பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அந்நிகழ்ச்சி தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைத்தபாடில்லை.
அதில் குறிப்பாக மதுமிதா மற்றும் சரவணன் விவகாரம் புரியாத புதிராகவே இருக்கிறது. அவர்களை வெளியே அனுப்பியதற்காக பிக் பாஸ் சொன்ன காரணங்கள் மக்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

பிக் பாஸ் பினாலே
இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிக் பாஸ் பினாலேவில் மதுவும், சரவணனும் மட்டும் மிஸ்ஸிங். வீண் சர்ச்சைகளை தவிர்க்க, பிக் பாஸ் அவர்கள் இருவரையும் தவிர்த்துவிட்டார் என்று தெரிகிறது. பிக் பாஸ் பைனல்ஸ்க்கு ஏன் போகவில்லை எனும் கேள்வியுடன் நடிகை மதுமிதாவை தொடர்பு கொண்டு பேசினோம். நம்மிடம் அவர் கூறியதாவது,

கணவரின் வீடியோ
"பிக் பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சிக்கு என்னை யாரும் கூப்பிடவில்லை. அவர்கள் கூப்பிட்டாலும் நான் போயிருக்க மாட்டேன். ஆனால் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன், எனது கணவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது போல் காட்டியிருக்கிறார்கள். எனது அம்மா மற்றும் அக்காவை கூட காட்டியிருக்கிறார்கள். இது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் எடுத்தது.

உண்மை என்ன?
என்னை தரம் தாழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி செய்திருக்கிறார்கள். உண்மையில் இப்படி செய்ததினால் அவர்கள் தான் தரம் தாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்தது ஒன்று. ஆனால் நடந்தது வேறு. என் மீது பொய் புகார் அளித்தது போலவே இதையும் செய்திருக்கிறார்கள். ஏன் இப்படி செய்தார் என்பது அவர்களுக்கு தான் தெரியும்.

மனக் காயம்
ஏற்கனவே காயப்பட்டிருக்கும் போது, அவர்களை மேலும் மேலும் காயப்படுத்துவது என்ன மாதிரியான செயல் என்பது தெரியவில்லை. கையில் ஏற்பட்ட காயம் ஆறிவிட்டது. ஆனால் மனதில் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. அது சரியாக இன்னும் நாளாகும்.

சேரன்
சேரன், கஸ்தூரி ஆகியோர் வெளியே வந்த பிறகு என்னை தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தனர். அதேபோல், பாத்திமா பாபு, ரேஷ்மா, சாக்ஷி, மோகன் வைத்யா, சரவணன் ஆகியோரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள். யாரையும் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதிர்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, நான் சம்மந்தப்பட்ட எபிசோடுகள் மற்றும் விஷயங்கள் குறித்து தான் அறிந்துகொண்டேன். மற்றபடி அந்த நிகழ்ச்சியை பார்ப்பதே இல்லை. நான் வைத்த சாம்பாரை ருசித்து சாப்பிட்டு பாராட்டிவிட்டு, பின்னாடி போய் குறை கூறிய ஷாக்கில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை. என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் என வியப்பாக இருக்கிறது. அதனால் யார், யார் வீட்டிற்கு போகிறார்கள் என்பது பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள விரும்பவில்லை" என இவ்வாறு மதுமிதா கூறினார்.


Click it and Unblock the Notifications











