சரவணனையும் மதுமிதாவையும் ஓரங்கட்டிய பிக்பாஸ்.. இல்லாத மாதிரியே முடிச்சுடுவாங்களோ?!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 103 : காதலர்கள் ஒன்னு சேர்ந்துவிட்டனர்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணனையும் மதுமிதாவையும் விஜய் டிவி இப்போது கூட அழைக்காமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் 15 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்கள், நடிகர் சரவணன் மற்றும் நடிகை மதுமிதா. இவர்கள் இருவருமே மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றனர்.

அவர்களின் நேர்மையான, கண்ணியமான விளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இருவருமே எதிர்பாராத விதமாக வெளியேற்றப்பட்டனர்.

சரவணன் சர்ச்சை

சரவணன் சர்ச்சை

சரவணன், தன்னுடைய இளவயதில் பேருந்தில் சென்றபோது பெண்களை உரசியதாக கமல் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மன்னிப்பு

மன்னிப்பு

இதனைத் தொடர்ந்து அவரை மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தினார் பிக்பாஸ். தனது பேச்சுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டார் சரவணன்.

வெளியேற்றிய பிக்பாஸ்

வெளியேற்றிய பிக்பாஸ்

ஆனால் அதனையும் ஏற்காத பிக்பாஸ், அவரது கண்களை கட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார். மன்னிப்பு கேட்ட பிறகும் சரவணனை வெளியேற்றியதால் அதிர்ச்சியடைந்தனர் ரசிகர்கள். சேரனை ஒருமையில் பேசியதே சரவணன் வெளியேற்றத்துக்கு காரணம் என கூறப்பட்டது.

காவிரி பிரச்சனை

காவிரி பிரச்சனை

இதனை தொடர்ந்து மதுமிதாவும் திடீரென வெளியேற்றப்பட்டார். மதுமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் காவிரி பிரச்சனை குறித்து பேசியதால் மதுமிதாவிடம் சக ஹவுஸ்மேட்ஸ் பிரச்சனை செய்தனர். மேலும் தமிழ்நாட்டுக்காக உன் உயிரை கொடு எனக் கூறி வற்புறுத்தினர்.

வெளியேற்றப்பட்ட மதுமிதா

வெளியேற்றப்பட்ட மதுமிதா

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா கத்தியால் தனது கையை கடுமையாக கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை தொடர்ந்து விதியை மீறியதாக, மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.

மாறி மாறி புகார்

மாறி மாறி புகார்

மதுமிதா வெளியே வந்த பிறகும் மதுமிதாவுக்கும் விஜய் டிவிக்குமான பிரச்சனை தொடர்ந்து வருகிறது. மதுமிதா மீது விஜய் டிவியும் விஜய் டிவி மீது மதுமிதாவும் மாறி மாறி போலீஸில் புகார் அளித்துக்கொண்டனர்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை பினாலேவை சந்திக்கிறது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.

இல்லாததுபோல்

ஆனால் இதுவரை மதுமிதாவும் சரவணனும் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்படவில்லை. இதனை கவனித்த நெட்டிசன்கள், மதுமிதாவும், சரவணனும் பங்கேற்ற சுவடே இல்லாததுபோல் நிகழ்ச்சியை முடித்துவிடுவார்களோ என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X