பிரஸ் மீட் வைக்காத விஜய் டிவி.. கிட்டதட்ட ஹவுஸ் அரஸ்ட் போல் வீட்டில் இருக்கும் மதுமிதா!

Recommended Video

பொய் புகார் காரணமாக செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த மது | Bigg Boss 3 Tamil | Madhumitha Pressmeet

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மதுமிதாவுக்கு விஜய் டிவி பிரஸ் மீட் வைக்காததால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை மதுமிதா பங்கேற்றிருந்தார். சக ஹவுஸ்மேட்கள் கொடுத்த டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றார் மதுமிதா.

இதனால் போட்டியின் முக்கிய விதியை மீறியதாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் தற்கொலை மிரட்டல் விடுப்பதாக விஜய் டிவி மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

பிரஸ் மீட்

பிரஸ் மீட்

இதுதொடர்பாக விளக்கமளித்த மதுமிதாவிடம் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த மதுமிதா விஜய் டிவி நிர்வாகமே பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளது.

இதுவரை ஏற்பாடு செய்யவில்லை

இதுவரை ஏற்பாடு செய்யவில்லை

அப்போது அனைத்தையும் பேசுகிறேன் என்று கூறினார். இப்போது வரை விஜய் டிவி போட்ட ஒப்பந்தத்தின்படிதான் உள்ளேன். நிகழ்ச்சி தொடர்பாக எதையும் பேசக்கூடாது என்று கூறினார் மதுமிதா. ஆனால் இதுவரை விஜய் டிவி தரப்பில் அவருக்கு என பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யவில்லை.

விஜய் டிவி மீது புகார்

விஜய் டிவி மீது புகார்

இந்நிலையில் மதுமிதா நேற்று நசரத்பேட்டை காவல்நிலையத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்தார். தபால் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் கமல் தன்னை கொடுமைப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

வழக்கறிஞர் தகவல்

வழக்கறிஞர் தகவல்

இதைத்தொடர்ந்து பேசிய அவரது வழக்கறிஞர், விஜய் டிவி இதுவரை மதுமிதா பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்யவில்லை. விஜய் டிவியுடனான ஒப்பந்தத்தின்படி விஜய் டிவி பிரஸ் மீட் நடத்தினால் மட்டுமே மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும்.

மற்றவர்களுக்கு பிரஸ்மீட்

மற்றவர்களுக்கு பிரஸ்மீட்

ஆனால் மதுமிதாவுக்கு மட்டும் பிரஸ் மீட் நடத்தாததால் அவரால் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறினார். மதுமிதாவுக்கு பின்னால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி, கஸ்தூரி ஆகியோருக்கு விஜய் டிவி நிர்வாகம் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்துவிட்டது.

கிட்டதட்ட ஹவுஸ் அரஸ்ட்

கிட்டதட்ட ஹவுஸ் அரஸ்ட்

ஆனால் மதுமிதாவுக்கு மட்டும் இன்னும் பிரஸ் மீட் நடத்தாததால் அவர் கிட்டதட்ட ஹவுஸ் அரஸ்ட்டில் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X