விஜய் டிவி பிரியங்கா கர்ப்பமா?.. அதனால்தான் அவசர திருமணமா?.. இது என்ன புது கதையா இருக்கு?
சென்னை: விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்துகொண்டிருப்பார் பிரியங்கா. அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்றாலே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக டிடி, கோபிநாத் ஆகியோருக்கு அடுத்ததாக அந்த சேனலின் செல்ல பிள்ளையாக இருப்பவர் அவர். முதலில் பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்தத் திருமண உறவு சில வருடங்களிலேயே முறிந்தது. இந்தச் சூழலில் அவர் இரண்டாவது வசி (எ)வசிஸ்ட் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். அந்தத் திருமணம்தான் கடந்த சில நாட்களாக ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் தொகுப்பாளராகவோ அல்லது ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோ தமிழ்நாடு முழுக்க பிரபலமாகலாம். அப்படித்தான் நடிகர்கள் சந்தானம், யோகி பாபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வெள்ளித்திரையில் கோலோச்சியிருக்கிறார்கள். அதேபோல் தொகுப்பாளர்களான கோபிநாத், திவ்ய தர்ஷினி ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி இயக்குநர் நெல்சன் திலீப்குமார், அமரன் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரும் விஜய் டிவியில்தான் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜே பிரியங்கா: அந்த லிஸ்ட்டில் இருப்பவர்களில் விஜே பிரியங்காவும் ஒருவர். விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அப்ளாஸை அள்ளியவர். தனது நகைச்சுவைத்தனமான பேச்சாலும், டைமிங் காமெடிகளாலும் நிகழ்ச்சியை போர் அடிக்காமல் நகர்த்தி செல்வார். இதன் காரணமாக அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரசிப்பதுண்டு.

பிக்பாஸ் பிரியங்கா: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த அவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார். அதில் அவர் ஓரளவு நன்றாக விளையாடினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. இருந்தாலும் அவருக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பிறகும் தனது ஆங்கர் பணியை சிறப்பாக தொடர்ந்துவருகிறார். இப்போதும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், சில ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்துவருகிறார்.
முதல் திருமணம்: இதற்கிடையே அவர் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரவீனும் விஜய் டிவியில் பணியாற்றியவர்தான். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் திருமணத்தில் முடிந்தது. திருமணம் செய்துகொண்டு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அதனையடுத்து சிங்கிளாக இருந்தார் விஜே பிரியங்கா.
இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க திடீரென அவர் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். டிஜேவாக இருக்கும் வசி (வசிஸ்ட்) என்பவரை காதலித்திருக்கிறார் அவர். சில நாட்களுக்கு முன்பு அவர்களது திருமணம் சென்னையில் நடந்தது. அந்தத் திருமணத்தில் பிரியங்காவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டார்கள். பிரியங்காவின் இந்தத் திருமணம்தான் இப்போது சின்னத்திரை உலகில் ஹெட்லைன்ஸாக இருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங்ஸ் 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் என்ன பேசினார்: அவர் அந்த வீடியோவில் பேசுகையில், "விஜய் டிவியில் பணியாற்றியபோது பிரவீன் குமார் என்பவரை முதலில் பிரியங்கா திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அதற்கான காரணத்தை இரண்டு பேருமே சொல்லவில்லை. அதனையடுத்து வசி என்கிற வசிஸ்ட்டுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வசி டிஜேவாக இருக்கிறார். அவருக்கு வயது எப்படியும் 60 இருக்கும். இந்தத் திருமணத்துக்கு ம.கா.பா ஆனந்த் உள்ளிட்டோர் எல்லாம் வரவில்லை என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதில் உண்மையில்லை. ஆனந்த், அமீர், பாவனி என பலரும் வந்திருந்தார்கள். அதேசமயம் குறைவான ஆட்களைத்தான் திருமணத்துக்கு அழைத்திருந்தார்கள். மொத்தமே 50லிருந்து 60 பேர்வரை வந்திருப்பார்கள். இந்த அவசர திருமணத்துக்கு என்ன காரணமாக இருக்கும். பிரியங்கா ஒரு வீடியோவை போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது. அதனால்தான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறியிருக்கிறார். அப்படியெனில் இந்த இரண்டாவது திருமணத்துக்கு முன்னதாகவே பிரியங்கா கர்ப்பமாகிவிட்டாரா?. அதனால்தான் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டாரோ என்ற கேள்வி எழத்தானே செய்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











