Pugazh :தவறாக நினைக்காதீங்க.. விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ்!
சென்னை : குக் வித் கோமாளி அடுத்தடுத்த சீசன்களில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் புகழ்.
கடந்த சீசனில் இவரை அதிகமாக காண முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்ததால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வப்போது இவர் வந்தார்.
இந்நிலையில் குக் வித் கோமாளி 4வது சீசனில் இவர் தொடர்ந்து இடம் பெற்றுள்ளார். அடுத்தடுத்த எபிசோட்களில் வித்தியாசமான கெட்டப்புகளில் இவர் அனைவரையும் கவர்கிறார்.

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட புகழ் :விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் புகழ். குறிப்பாக இவருக்கு மிகச்சிறந்த அடையாளத்தை குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்து வருகிறது. குறிப்பாக இரண்டாவது சீசனில் இவரது பர்பார்மென்ஸ் ரசிகர்களை கட்டிப் போட்டது. காமெடி நடிகர்களுக்கு அதிகமாக இருக்க வேண்டிய டைமிங் காமெடி சென்ஸ் மற்றும் உடல்மொழி இவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் நடுவர்கள், சக போட்டியாளர்கள் என அனைவரிடமும் அடி வாங்கத் தயாராக உள்ளார். இதன்மூலம் அந்த ஷோவில் சுவாரஸ்யத்தையும் கூட்டி வருகிறார். குறிப்பாக வெங்கடேஷ் பட்டிடம் அவர் அதிகமாகவே அடி உதை என வாங்கி நிகழ்ச்சியை கலகலப்பாக்குகிறார். கடந்த சீசனில் புகழ் அதிகமான அளவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. காரணம் இவர் அதிகமான படங்களில் கமிட்டாகி நடித்து வந்ததுதான்.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நடைபெற்று வரும் நிலையில், இவரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. வாரவாரம் வித்தியாசமான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை நிகழ்ச்சியோடு சிறப்பாக ஒன்ற வைக்கிறார். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் இவர் கில்லி படத்தில் விஜய்யின் கெட்டப்புடன் பங்கேற்றார். இவருக்கு இந்த கெட்டப் சிறப்பாகவே பொருந்தியிருந்தது. ஆனாலும் வழக்கம் போல போட்டியில் அவர் அடி வாங்கியதையும் பார்க்க முடிந்தது.

சிருஷ்டி டாங்கே மற்றும் நடுவர் வெங்கடேஷ் பட் இருவரும் புகழை புரட்டி எடுத்து விட்டனர். இந்நிலையில் அனைத்து விஜய் ரசிகர்கள் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக புகழ் தெரிவித்துள்ளார். யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் அனைத்தும் கற்பனையே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். விஜய் கெட்டப்பில் இவ்வாறு மற்றவர்களிடம் அடி உதை வாங்கியதை அவரது ரசிகர்கள் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
சமையலையும் காமெடியையும் அடிப்படையாக கொண்டு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி விரைவில் நிறைவடையவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் பைனல் போட்டியின் போட்டியாளராக சிவாங்கி தேர்வாகியுள்ளார். அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இன்னும் 4 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிப்போட்டிக்கு அனுப்பப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில், பிக்பாஸ் தனது அடுத்த சீசனை துவங்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











