என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ.. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் டிவி புகழ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகர் புகழ். சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்ற புகழ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் புகழ் மகளின் முதல் பிறந்த நாளுக்கு அழகான வாழ்த்துக்களை சொல்லி போட்டோவை பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவி என்று சொன்னாலே ஒரு சில பேரின் பெயரும் முகமும் தான் நம் நினைவிற்கு வரும்.அப்படிப்பட்ட முதலில் நம் நினைவிற்கு வருபவர் தான் நடிகர் புகழ். இவர் விஜய் டிவியின் ஒரு அங்கமாகவே அவர் மாறிவிட்டார். சிரிப்புடா என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் புகழ், பின் வடிவேலு பாலாஜியின் பரிந்துரையின் பேரில் கலக்க போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் வார்த்தைக்கு வார்த்தை கவுண்ட்டர் கொடுத்து அனைவரையும் சிரிக்க வைத்தார்.

vijay tv pugazh instagram

விஜய் டிவி புகழ்: இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். ஒரு கட்டத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார் புகழ். இவர் நடிக்கும் லூட்டியை பார்க்கவே இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அடுத்தடுத்த படங்களில்: சின்னத்திரையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த புகழ் வெள்ளித்திரையில் மிஸ்டர் ஷூ கீப்பர் என்ற படத்தில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, சிக்ஸர், காக்டெயில், சபாபதி, துணிவு, அயோத்தி, டிஎஸ்பி,ஏஜெண்ட் கண்ணாயிரம், காசேதான் கடவுளடா, என்ன சொல்ல போகிறாய் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையில் மட்டுமே கலக்கி வந்த நடிகர், கோலி சோடா 2 வெப் தொடரில் வில்லனாக நடித்துள்ளார். இந்த தொடர் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி உள்ளது.

vijay tv pugazh instagram

காதல் திருமணம்: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என பிஸியாக நடித்து வந்த நடிகர் புகழ், தனது நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, தங்களது முதல் திருமண நாளன்று, பென்சி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. புகழ் தனது மகளுக்கு ரிதன்யா என்று பெயர் வைத்து இருக்கிறார்

பொக்கிஷம் நீ: இந்நிலையில், புகழ் தனது மகளின் முதல் பிறந்த நாளுக்கு போட்டோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளில் இருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது. முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இணையவாசிகள் பலரும் புகழின் க்யூட்டான மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X