போனவாரம் காந்தாரா.. இந்த வாரம் காஞ்சனாவா.. குக் வித் கோமாளி புகழின் புது கெட்டப் எப்படி இருக்கு?
சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் சீசன் 4லும் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். கடந்த வாரம் காந்தாரா கெட்டப் போட்டு பலரது கவனத்தையும் கவர்ந்த புகழ் இந்த வாரம் பெண் வேடமிட்டு அசத்தி உள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் டிவியில் முகம் தெரிந்து விட்டாலே பலரும் பிரபலமாகி விடுகின்றனர். மேலும், கொஞ்சம் டேலன்ட்டும் சேர்ந்து விட்டால் சினிமா வாய்ப்புகளும் கதவை தட்டி வருகின்றன.
குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாருன்னு கலக்கி வந்த புகழ் சமீப காலமாக சினிமாவிலும் பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார்.

விஜய் டிவி புகழ்
சந்தானம், சிவகாரத்திகேயன், யோகி பாபு என பல பிரபலங்களை தமிழ் சினிமாவுக்கு தந்த விஜய் டிவியில் இருந்து சமீபத்தில் வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் காமெடி நடிகர் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி உடன் இணைந்து புகழ் செய்த சேட்டையை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தீவிர விசிறிகளாகவே மாறிய நிலையில், ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

சீசன் 4
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி டிஆர்பியில் அடிவாங்கி வரும் நிலையில், மணிமேகலையின் எக்ஸிட், புகழின் புதிய புதிய அவதாரங்கள் என ஏகப்பட்ட முயற்சிகளை அந்த டீம் எடுத்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சினிமாவில் பிசியாக இருக்கும் புகழை மீண்டும் அழைத்து வந்ததே அந்த காரணத்திற்காகத்தான் என்கின்றனர்.

சினிமாவில் பிசி
சந்தானத்தின் சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம், அஜித்தின் வலிமை, விஜய்சேதுபதியின் டிஎஸ்பி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக அசத்தி வருகிறார் புகழ். புது வீடு, ஆடி கார் என ஆளே வேறலெவலில் மாறிய நிலையில், மீண்டும் விஜய் டிவி ரசிகர்களை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மகிழ்வித்து வருகிறார்.

காந்தாரா கெட்டப்
கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் போட்டு வந்த காந்தாரா கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் அடேங்கப்பா என்னவொரு பர்ஃபெக்ஷன் என பாராட்டித் தள்ளினர். சிலர், காந்தாரா படத்தின் தரத்தை கெடுக்கும் விதமாக உள்ளது என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காந்தாரா எதற்கு என்றும் இது காந்தாரா ஸ்பூஃப் மாதிரி இருக்கு என்றும் விமர்சித்தனர்.

இந்த வாரம் காஞ்சனாவா
கடந்த வாரம் காந்தாரா கெட்டப் போட்டு பலரையும் ஷாக் ஆக்கிய புகழ் இந்த வாரம் காஞ்சனா கெட்டப் போட்டுள்ளாரா என அவரது புதிய பெண் வேடத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கருப்பு நிற சேலையை அணிந்து கொண்டு பார்க்க அச்சு அசல் பெண் போலவெ மாறி உள்ளார் புகழ்.

லேடி கெட்டப் சூப்பர்
"மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் பெண் வேடம் போட்டு இருக்கிறேன். மக்கள் மத்தியில் புகழ் யார் என்று தெரிய வைத்தது இந்த வேடம் தான். மீண்டும் அதனை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி. இத்தனை தூரம் என்னை அழைத்து வந்துள்ள என் அன்பு உடன்பிறப்புகளுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவோடு மக்களை மகிழ்விப்பேன். அன்பும், நன்றிகளும்...என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.." என புகழ் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஷெரின் மாதிரி இருக்க
புகழின் இந்த பெண் வேடத்தை பார்த்த பல ரசிகர்கள் அவரை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். அழகி என்றும் திடீரென பார்க்க அப்படியே பிக் பாஸ் ஷெரின் மாதிரியே இருக்கீங்க புகழ் என்றும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











