twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏய் இருங்கப்பா.. அட பொறுங்கய்யா.. தடியடி.. ஒரே குழப்பம்.. வருத்தத்தில் விஜய் டிவி புகழ்!

    |

    சென்னை : கடை திறப்பு விழாவிற்கு வந்த குக்வித் கோமாளி புகழை காண ஏராளமான கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களை தடியடி நடித்தி கலைத்தனர்.

    விதிமுறைகளை மீறி அதிக கூட்டத்தை கூட்டியதற்காக கடையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா? என்ன செய்ய போகிறார் விஜய்?

    மேலும் கடையின் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

    மனதில் நீங்க இடம்

    மனதில் நீங்க இடம்

    விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன. அப்படி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நிகழ்ச்சி குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தற்போது நடைபெற்று வருகிறது.

    2வது சீசன்

    2வது சீசன்

    குக்வித் கோமாளி 2வது சீசனில் கோமாளிகளாக புகழ் , பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என பலர் உள்ளனர். போட்டியாளர்களான மதுரை முத்து, கொண்ட தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின்,தர்ஷா, குப்தா, பவித்ரா என பலர் இதில் உள்ளார்.

    தனி ரசிகர் கூட்டம்

    தனி ரசிகர் கூட்டம்

    இந்த ஷோவில் எத்தனைக் கோமாளிகள் இருந்தாலும் புகழ் செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கும் படியும் விழுந்து விழுந்து சிரிக்கும் படியும் இருக்கும். இதுவும் புகழ் பவித்ரா லட்சுமி பின்னால் சுற்றும் காட்சிகளும் வயிறு குலுக்க சிரிக்க வைக்கும். இந்த நிகழ்ச்சியில் புகழியின் காமெடியை காணவே தனி ரசிகர் கூட்டம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. புகழ் தற்போது விஜய் சேதுபதி, அருண்விஜய் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார்.

    லேசான தடியடி

    லேசான தடியடி

    இந்நிலையில் நெல்லையில் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் புகழ். விஜய் டிவி பிரபலம் என்பதால் அவரை காண ஏராளமானர் ஒன்று கூடி விட்டர். இதனால் அந்த இடத்தில் பெரும் கூட்டம் சேர்ந்ததால் அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடித்தினர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. விதிகளை மீறி அதிக அளவு கூட்டத்தை கூடியதால் கடையை மூடி சீல் வைத்தனர். மேலும் கடையின் உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

      English summary
      Vijay tv Pugazh going to mobile shop opeing function
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X