வலிமை டிரைலரில் கலக்கிய விஜய் டிவி பிரபலம்… கொண்டாடும் ரசிகர்கள் !
சென்னை : வலிமை திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
Recommended Video
டிரைலரின் வரும ஒவ்வொரு சீனையும் அஜித்தின் ரசிகர்கள் சும்மா தெறிக்கவிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. வெளியான சில மணி நேரங்களிலே இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

வலிமை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் ரிலீஸுக்காக தயார் நிலையில் உள்ள திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

யுவன் சங்கர் ராஜா
படத்தின் ஹீமா குரோஷி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவை நீரவ்ஷா மேற்கொள்கிறார் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

இசையை கொண்டாடி ரசிகர்கள்
இப்படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த 14 ஆம் தேதி வெளியானது.யாரும் எதிர்ப்பாராத வகையில் அமைந்த இந்த மேக்கிங் வீடியோ சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலானது. சமீபத்தில்அம்மா சென்டிமென்ட் பாடலும் , தீம் இசையும் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கலக்கும் டிரைலர்
இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் முதல் அனைவரும் எதிர்பார்த்து இருந்த வலிமை பட டிரைலர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கலக்கும் வசனங்களுடன் வெளியாகியுள்ள வலிமை பட டிரைலர் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பைக்கர்ஸை பட்டை உரிக்கும் காவலராக வந்து மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.

விஜய் டிவி புகழ்
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள வலிமை படத்தின் டிரைலரில் குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடிகர் அஜித்துடன் விஜய் டிவியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த புகழ் நடித்துள்ளார். அந்த டிரைலரில் கைகளை கட்டிக்கொண்டு அஜித்தின் பின்னால் நடந்து வருகிறார். அந்த காட்சியின் புகைப்படத்தை புகழின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள்


Click it and Unblock the Notifications











